இந்தியா
மாளிகை கலகலப்பாக காட்சியளித்தது
தேன்மொழி அஸ்வந்த் எழுந்திருக்க முதலே எழுந்து குளித்து சமையல்கட்டுக்கு விரைந்தாள். அவளை எதிர்கொண்ட சமையல்கார பார்வதி'ஏம் புள்ள எதுக்கு சீக்கிரம் எழுந்திரிச்சே?"
'இதுவே நேரமாச்சுன்னு பதறிகிட்டு வர்றேன்..நீ வேற! நாலு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கிறவ இப்போ மணி ஆறாகுது எவ்வளவு லேட்டு?" அவள் கேட்க,
'அட வெவரம் கெட்டவளே! கல்யாணம் ஆன பொண்ணு! புருசன் தேடுவான். ஆம்பிளை கண் முழித்ததும் பொண்டாட்டியை இழுத்து வைச்சுகிட்டு கொஞ்ச தோணும்..! வேண்டாம் வேண்டாம் என பொம்பளை நாங்க பிகு பண்ணுவோம். புதுசா கட்டிக்கிட்டவங்கதானே ஆம்பிளைங்க எப்ப பாரு எங்க முந்தானை சூட்டுக்குள்ளே இருக்க விரும்புவாங்க. இது புரியாம நீ பாரு, எழுந்திரிச்சதும் இங்கே வந்துட்டியாக்கும்" பார்வதி சொல்ல தேன்மொழிக்கு நாணம் வந்தாலும் முகத்தில் முறைப்பை வரவழைத்தவளாக,
'பார்வதிம்மா நீ பச்சையா பேசுவேன்னு செண்பகா சொல்வா, நான் நம்பறது இல்லை. ஆனா இப்போ நீ பேசுறதை பார்த்தா அவ சொல்றது நிஜந்தான் போல" தேன்மொழி முறைப்பு போய் வெட்கம் வர கேட்டாள்.
'அடி போடி இது எல்லாம் பச்சையா? எல்லா வீட்டிலேயும் நடக்குற தான். உனக்கு இப்போது தானே ஆரம்பம். போகப்போக பாரு புரியும்;! அது சரி சின்னய்யா எழுந்திரிக்கலையா?"
'இல்லை"
'வழக்கமா அவரும் அஞ்சு மணிக்கே எழுந்திரிச்சு மாடியில, பால்கனியில நின்றுகிட்டு கையை காலை முறிப்பாரு சின்னப்பையன் மாதிரி மாளிகை முழுக்க ஓடுவாரு"
'என்னது கையை காலை முறிப்பாரா?"
'ஆமாண்டி இதோ இப்படித்தான்" அவர் செய்து காட்ட? தேன்மொழிக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது.
'அடக்கடவுளே ! அது உடற்பயிற்சி பார்வதிம்மா! அப்படி செய்தால் உடம்புக்கு நல்லது..அதான் அழகாக இருக்காரு"
'இதபாருடா கட்டியவனுக்கு வக்காலாத்து வாங்குற அழகை?"
'பார்வதிம்மா அவருக்கு என்னவெல்லாம் புடிக்கும்? எது விரும்பி சாப்பிடுவாரு? எனக்கு எதுவும் தெரியாது" அவள் கவலையுடன் கூறினாள்.