என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா அத்தியாயம் 23

1K 24 0
                                    

பூஜைக்கான ஏற்பாடு அதிகாலை நான்கு மணியிலிருந்து தொடங்கிவிட்டிருந்தது. கார்மேகமும் கணக்கு பிள்ளையும் மேற்பார்வை இட, அவர்களது குல தெய்வ அம்மன் கோவில் திருவிழா போல களைகட்டியிருந்தது.

ஒரு காரில் பரமசிவம் தம்பதியினரும் வேணுகோபால் தம்பதியினரும் ஏறிக்கொள்ள அடுத்த காரில் தேன்மொழி பின்சீட்டில் அமர்ந்திருந்தாள்.

அஸ்வந்த் கட்டிய வேட்டியை இழுத்து மேலே தூக்கியபடி நடந்து வந்தான். அவனது முகத்தில் பிரதிபலித்த அவஸ்தையை பார்த்தாள் தேன்மொழி. பாவமாக இருந்தது அவளுக்கு. பழக்கம் இல்லாத ஒன்று அவனது ஆடை என்று தெரிந்தது.

காரில் ஏறி உட்கார்ந்தவன் பெருமூச்சு விட்டான். அவன் அருகில் அமர்ந்ததும் அவனிடமிருந்து வந்த நறுமணமும், அவனது அருகாமையும் அவளுக்கு சொர்க்கலோகத்தில் மிதப்பது போல ஓர் உணர்வு எழுந்தது. அவனை பார்த்தாள். அவனோ வேட்டியை அலட்சியமாக தூக்கி முழங்கால் மேல் போட்டு வெற்று தொடையுடன் அமர்ந்தபடி தாளம் போட்டான். அவனது இருப்பை பார்த்தவளுக்கு சங்கடமாக இருக்க பார்வையை திருப்பினாள்.

'ஹனி..எப்படி இந்த காஸ்டியூமை கட்டிக்கிறே? என்னோடது ஒரு ரூ அண்ட த்ரீ சுத்து சுத்துறது போல..பட் உன்னோடது'' என்று அவள் எதிர்பாராத போது அவன் குனிந்து அவளது புடவை மடிப்புகளை எடுத்துக்கொள்ள,

'ஆத்தாடி என்னங்க பண்றீங்க?" தேன்மொழி எதிர்பார்க்கவில்லை கணவன் தனது கால்களில் குனிந்து புடவையை இழுப்பான் என்று.

'ஓன் ரூ த்ரீ ஃபோர் ஓ மை காட் எத்தனை? ஹனி எனக்கு தலை சுத்துது. இந்த டிரஸ் எவ்ளோ மீட்டர் இருக்கும்?" அவன் கேட்டதுடன் நிற்காமல் அவளது முந்தானையை எடுத்து அது எத்தனை மடிப்புகள் என எண்ணிக் கொண்டிருந்தான். கார் ஓட்டிக்கொண்டிருந்த வீரா சிரிக்க தேன்மொழிக்கு கூச்சமாகிப்போனது.

'அய்யோ இது எண்ணுவதற்கு இதுவா நேரம்?" முணுமுணுத்தவாறு அவனை பார்த்து,

'அ..அந்த கணக்கெல்லாம் எனக்கு தெரியாதுங்க..கட்டிக்குறது எல்லாம் பழக்கம்" என்றவாறு அவனிடமிருந்து முந்தானையை உருவியள்,

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin