என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா அத்தியாயம் 36

923 22 2
                                    

''ஆனா சின்னய்யா மேல பலகை விழுந்து பலத்த அடிபட்டுடுத்து வலது கை தோள்பட்டையில கட்டுபோட்டு இருக்காங்க..அதான் வைத்தியர் வந்துட்டு போறார்" என அவன் முடிக்க அவளுக்கு ஒரு நொடி பதறியது. கண்கள் இருட்டும் போல இருந்தது. தோழிகளும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

''வீரா என்னை இறக்கிவிடு! நான் நடந்து போய்க்கிறேன் புள்ளையை ஏத்திகிட்டு போ..அவ பயந்துட்டா.. அவசரப்பட்டு சொல்லிட்டே..! தேனு அது விழுந்த நோவு தான்...வேறு எதுவும் பெரிதாக இல்லை." அவனை கண்டித்துவிட்டு அவர் விளக்கம் கொடுத்தவாறு இறங்கினார்.

தேன்மொழி சட்டென்று வண்டிக்குள் ஏறினாள். கண்களில் இருந்து வழிந்த நீரை துடைக் கூடத்தோன்றாது அவள் இருப்பதை பார்த்து,

''அம்மா அய்யாவுக்கு ஒண்ணும் ஆகலை..நீங்க இப்படி அழுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் சொல்லியிருக்க மாட்டேன்." வீரா குற்ற உணர்வுடன் சொல்ல

''வீராண்ணா! என்கிட்டே உண்மையை சொல்லுங்க அவ..அவருக்கு ஒண்ணும் ஆகலை தானே ?'' அவள் நம்பாமல் நெஞ்சில் கை வைத்து அதன் துடிப்பை அடக்கியவாறு பதட்டமாக கேட்க ,

''ச்சேச்சே..! நம்ம ஊரு எண்ணெய் போட்டு பச்சிளம் இலை அரைச்சு கட்டுப்போட்டிருக்கும்மா..வீக்கம் வத்திடும் சீக்கிரமா சரியாயிடும்..அதுவும் அய்யா துரு துருவுன்னு நல்ல ஆரோக்கியமாக இருக்கார் கவலைப்படாதீங்க" அவன் சொல்ல,

''அவர் என் கூட வர்றனேன்னு சொன்னார். நான் தான் பாவி போ! என்று விரட்டிவிட்டேன். என் கூட வந்திருந்தா இது ஆகியிருக்காது இல்லையா?" அவள் தேம்பலுடன் சொன்னாள்.

வீடு வந்தது தேன்மொழி ஓடாத குறையாக ஓடிப் போனாள்.

''என்ன கஷ்டகாலமோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு..என் மேலே விழுந்து இருக்கலாம் வள்ளி..என் பேரன் மேலே விழுந்து.." பரமசிவம் கவலையாக சொல்லிக்கொண்டிருந்தார்.

''தாத்தா...வீக்கம் தானே...பிராக்சர் ஒண்ணும் இல்லை...இதுக்கு எல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு..." அஸ்வந்த் தாத்தாவின் தோளில் சாய்ந்தவாறு சொன்னான்.

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now