என்னில் நீயடி ! - எஸ்.ஜோவிதா அத்தியாயம் 61

922 19 0
                                    

இந்தியா,

பரமசிவம் ஈசி சேரில் படுத்திருந்தவாறு பத்திரிகை படித்து கொண்டிருந்தார். வள்ளியம்மை அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தார்.

வேணுகோபால் படுத்த படுக்கையாக இருந்த தேவகிக்கு ஜூஸ் பிழிஞ்சு கொண்டிருந்தார். வீட்டு டெலிபோன் ரிங்கானது.

''வள்ளி யாருன்னு போய் பாரு..." பரமசிவம் மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறு கூற, வள்ளியம்மை வந்து போனை எடுத்தார்.

''அலோ..." என்றார் மறுமுனையில் எந்த சத்தமும் இல்லை. இவர் நாலு முறை அலோ என்று கத்திவிட்டு,

''என்னங்க...ஒரு சத்தமும் இல்லை..." என்றவாறு வந்தமர்ந்தார். போன் மறுபடியும் ரிங்கானது. வேணுகோபால் ஜூஸ் பிழிந்த கிளாசை கழுவ வெளியே வந்தவரது காதில் போன் ரிங்கானது கேட்க,

''யாரும்மா..சும்மா தொண தொணன்னு அடிச்சுகிட்டு..." மனைவியின் தூக்கத்தை கெடுப்பது போல் இருந்ததை  பார்த்து எரிச்சலுடன் கேட்டார்.

''தெரியலைப்பா..அலோ! அலோ! என்று நான் கத்தினேன் யாருன்னு தெரியலை அப்பால..." தாய் சொல்ல சினத்துடன் போன் டிஸ்பிளேயை பார்த்தார்.

அது அமெரிக்காவில் இருந்து வருகிறேன் என்றது. அவரது முகம் கோபத்தின் உச்சிக்கு போனது. மகன் ரிங்காகும் டெலிபோனை தொடாமல் அதையே வெறிச்சு பார்த்து கொண்டிருப்பதை பார்த்த பரமசிவம் எழுந்து வந்தவராய்

''என்னப்பா? யாரு போன்ல..எங்கே இருந்து வருது...எடு"

''இல்லைப்பா....அமெரிக்காவில இருந்து தான் வருது..".அவர் குரல் கோபத்தில் வெளிப்பட,

''அமெரிக்காவில இருந்தா...? அடேய்...என் பேரன்டா...பேரன் தான் எடுக்குறான்....எடுடா போனை" என்று அவர் துள்ளி குதிக்காத குறையாக கத்த, வள்ளியம்மையும் எழுந்து ஓடி வந்தார்.

வேணுகோபால் தலையசைப்பில் மறுத்தவராக
''எதுக்குப்பா? அவன் அந்த வெள்ளைக்காரியை கல்யாணம் கட்டியிருப்பான்..அவ கூட இந்தியா வருகிறேன் என சொல்ல எடுக்குறான்.. அதை என் காதால நான் கேட்கவா...? ச்சீ..." அவர் எரிந்து விட்டு போனார்.

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now