'ஹேய்...அஸ்வந்த்! வாடா! வா!" ரோஷன் பால்கனியிலிருந்து ரெண்டு வீதி தள்ளி இருக்கும் நண்பன் காரில் வந்து இறங்க ஏதோ பிராபளம் என நினைத்தவனாக இறங்கி வந்து வரவேற்றான்.
'ஹாய்டா..!"
'ஹாய்டா....லிட்டில் அப்செட்..." அஸ்வந்த் சொல்ல,
'அப்செட்? வாட்? நான் இருக்கும் போது நீ எதுக்கு அப்செட்டும் ஆப்செட்டும் ஆகிகிட்டு? கமான் என்னாச்சு?" ரோஷன் நண்பனை கட்டியணைத்தபடி, அவனது தோள்களில் தட்டியவாறு கேட்டான்.
ஆரம்பத்தில் இருந்து நண்பன் போட்ட சட்டம் அது. 'நீ எந்த மொழியில வேணா உளறிக்கோ, கொஞ்சிக்கோ, ஆனா என்கிட்டே பேசும் போதும் சரி, என் அம்மா கீதா கிட்டே பேசும் போதும் சரி தமிழை தவிர வேறு எதுவும் வர கூடாது உன் உதட்டில்" என.
அவர்கள் அப்படி கண்டிசன் போட்டதால் என்னவோ அஸ்வந்தும் பொறுக்கி எடுத்து எடுத்து பேசக்கற்றுக்கொள்ள தொடங்கியிருந்தான். அஸ்வந்த் நண்பனை பார்த்து மெல்லிதாக புன்னகை, சிந்தியவாறு முடிந்த வரை தமிழ் வார்த்தைகளை தேடினான்.
'யூ நோ.. ஜுலியானா? மை பேரண்ட்சுக்கு இன்டர்டியுஸ் பண்ணி வைச்சேன்.."
'ஓ ரியலி! கடைசியில ஒரு வழியா அறிமுகம் முடிஞ்சுடுச்சா? வெல்டன் மை டியர் பாய்..."
'பஸ்ட் ரொம்பவும் பயமா இருந்திச்சு! பட் மை லைவ்! நாந்தான் முடிவு எடுக்கணும்..எதுன்னாலும் அம்மாகிட்டே தான் முதல்லே சொல்லுவேன்... அம்மா என் ஆசைக்கு குறுக்கே நிற்கமாட்டாங்க, திஸ் டைம் ஒரு கேர்ளுடன் நான் போய் நின்னபோது அவங்க ஷாக் ஆன மாதிரி தெரிஞ்சது.." என அவன் நடந்தை சொன்னான்.
'ம்..ஒகே..அவங்க சொல்றதும் கரக்டுதான்டா...நம்ம நாட்டு கோயிலும் கடவுள்களும் சிறப்பு சக்தி வாய்ந்தவை..ஒரு வேண்டுகோள் வைத்து பிரேயர் பண்ணா கண்டிப்பா நல்லது நடக்கும்..பெரியவங்க உன் நல்லதுக்குத்தான் சொல்றாங்க , போயிட்டு வருவது ஒண்ணும் பிரச்சனையே இல்லையே..".
.'.........'
'இதில நீ எதுக்கு தயங்குறே?"
'நோ ரோஸ்...எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை பட்..மம்மியோட மனசு கஷ்டப்படக்கூடாது! அப்புறம் அவங்க என்கிட்டே கேட்டவிதம் வேற..ஆர்டர் போடாமல் கெஞ்சி கேட்டாங்க. என்னால மறுக்க முடியலை. அவங்க திருப்திக்காகவேனும் நான் போகணும்..பட் ஜுலியை அழைச்சுட்டு போனா , இன்னும் நல்லா இருக்கும்."