நியூயார்க்,
இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த தேவகியும், வேணுகோபாலும் தம் கம்பெனிகளையும், வீடு கார்கள் என சகலதையும் முன்னேற்பாட்டுடன் செய்து வைத்தபடி, அவற்றை எல்லாம் மகனுக்கு தெரியாமல் காதும், காதும் வைத்தது போல விற்று , பணத்தை வங்கியில் போட்டுக்கொண்டார்கள்.
அஸ்வந்தால் உருவாக்கபட்ட கம்பெனிகள் மட்டும் அவனது நண்பன் ரோசனே பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை இருந்ததால், அந்த விசயத்தில் எதையும் செய்யாமல் இருந்தனர்.
அஸ்வந்த் , ஜூலியானாவை அறிமுகம் செய்து வைத்தபிறகு வீட்டு பக்கமே வரவில்லை. அவனை காணாது பெற்றவர்கள் என்னவென்று கேட்க போன் செய்ய நினைத்தபோது, அவனே போன் செய்தான்.
'மம்மி நான் இந்தியா கிளம்ப முதல் இங்கே ஏதாவது பிராபளம் ஆகிடக்கூடாது அல்லவா? அதனால ரோசன் திண்டாடக்கூடாது. அவனுக்கு சப்போட்டா இருக்க சில ஆட்களை தயார்படுத்தவேண்டியிருக்கு. அதை முடிச்சுட்டு வந்துடுறேன். கம்பெனி ஹெட் ஹவுசில தான் இருக்கேன் டோண்ட் வெறி!" என்று வைத்தான்.
பெற்றவர்கள் பரவாயில்லை மகன் தொழில் விசயத்தில் பொறுப்புள்ளவன் தான். படித்து முடித்துவிட்டு சொத்துக்கள் இருக்குதானே ஊர் சுத்தலாம் என்று தான் மகன் வந்து நிற்பான் என்று வேணுகோபால் நினைத்திருக்க,
அவனோ தேவகி நினைத்து போல
' அம்மா பிசினஸ் தொடங்க போறேன் ஹெல்ப் வேணும் ' என்று கேட்டு வந்து நின்றதை பார்த்து பூரித்துத்தான் போனாள்.அவன் என்ன பிசினஸ் செய்தாலும் தனக்கு அதை பற்றி கவலை இல்லை. எந்த பிசினசிலும் நுணுக்கங்களும், நிர்வாகத்திறமையும் கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. பொறுப்புணர்வு இன்னும் கூடும். பல நல்ல விசயங்கள் கற்றுத்தெளிய இடமுண்டு. மகன் மனது வேறு எந்த கெட்ட திசைக்கும் செல்ல இடம் இருக்காது. என்று எண்ணியவர்களாக சம்மதம் தெரிவித்ததோடு, அவனுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்தார்கள்.
![](https://img.wattpad.com/cover/246316545-288-k68933.jpg)