என்னில் நீயடி ! - எஸ்.ஜோவிதா அத்தியாயம் 60

950 20 0
                                    

தலைமை கம்பனிக்கு வந்து சேர, எல்லா ஊழியர்களும் அவரவர் வேலையை செய்து கொண்டிருக்க, ஒரு ஆறு பேர் அவர்களது ஆடையிலும் முடிவெட்டிலும் சொல்லாமல் சொல்லியது இன்காம் ஆபிசர்கள் என்று. அதில் ராபர்ட்டும் இருக்க, அஸ்வந்துக்கும், ரோசனுக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவர்களது தோழன்.

''அடப்பாவி! நீ கூடவா டையை கட்டிகிட்டு கிளம்பி வந்துட்டே" என்பது போல ரோசன் அவனை பார்த்தான்.
அவன் கண்களால் ''சாரிடா'' என்றான்.

அஸ்வந்த் வந்ததும் ஆறுபேரும் அவனுக்கும்  ரோஷனுக்கும் கை குலுக்கினார்கள்.

''மிஸ்டர் அஸ்வந்த்...சாரி பார் த டிஸ்டபர்ன்ஸ்...உங்க கம்பனிக்கு வர வேண்டியதாகி போனதுக்கு நீங்க எல்லாம்.." அவர்களில் ஒரு மூத்த அதிகாரி லாரன்ஸ் தொடங்க,

''சார் ப்ளீஸ்...வாங்க நாம மீட்டிங் ரூமுக்கு போயிடலாம்...உங்க எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல கடமை பட்டிருக்கேன்.." அவன் பணிவுடன் சொன்னதும், எல்லோரும் மீட்டிங் ரூமுக்குள் நுழைந்தார்கள்.

நீள் வடிவ டேபிளில் எப்பொழுதும் குடிப்பதுக்கான பானங்களுடனும், பலவகையான பழங்களுடனும்,  பூ செண்டுகளோடும் அலங்கரித்தே இருக்கும் அந்த ரூம். எல்லோரும் அமர்ந்தனர்.

''கேளுங்க சார்...நாங்க எந்த விதத்தில் உங்களை இங்கு வரவழைக்க காரணம் ஆனோம் என்று தெரிஞ்சு கொள்ளலாமா?"

''மிஸ்டர் அஸ்வந்த்...நாங்க யாரும் இங்கு இஷ்டப்பட்டு வரவில்லை. அதுக்கு காரணம் எந்த பக்கம் பார்த்தாலும் நீங்க சரியாக இன்காம் கட்டிகிட்டு வந்திருக்கீங்க...பட்.." என அவர் நிறுத்த, அவன் புருவம் முடிச்சுட பார்த்தான்.

''எங்க மேலிட அதிகாரிகளுக்கு வந்த தகவலின் படி நாங்க சில கேள்விகள் கேட்க போறோம்.."

''ஓ தாராளமாக...கேளுங்க..." அவன் தோள்களை குலுக்கிவிட்டுக்கொண்டான். ரோஷன், ராபர்ட்டை பார்த்து முறைத்தவண்ணம் இருந்தான்.

''உங்களுக்கு மொத்தம் எத்தனை கம்பனிகள்?"

''ஆறு சார்..பட் அதில ஒண்ணு ஏஆர் இன்ஸ்டிடியூட் பிசினஸ் புதுசா பண்ண போறவங்களுக்கான ஓரு டீச்சிங் செண்டர். மத்தது ஏஆர் கம்ப்யூட்டர் ஆக்சஸ் பிரைவேட் லிமிட்டெட், ஏஆர் ஆட்டோமொபைல் ஆக்சஸ் பிரைவேட் லிமிட்டெட், ஏஆர் பேஷன்  டிசைனிங், ஏஆர் காஸ்மெட்டிக் பிரைவேட் லிமிட்டெட் அண்ட் லாஸட் ஏஆர் ஐடி கம்பனி.." அவர்கள் கேட்டதை விட அவன் மேலதிக தகவலை சொன்னான். அடுத்த கேள்வி அந்த வகையானதாக இருக்கும் என்று தெரிந்து.

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாDonde viven las historias. Descúbrelo ahora