''வாங்க மேடம்...அழகான கவிஞரே வருக...! காதல்ரசனையுள்ள கவியே வருக..! கலாரசிகையே வருக...! ரவிவர்மாவின் வாரிசே வருக!" என பெண்கள பாட, தேன்மொழி அவர்களது கையில் இருக்கும் நோட்டை பார்த்து நாக்கை கடித்தாள்.
''என்ன? என் கிறுக்கல் நோட்டை படிச்சீட்டீங்க போலிருக்கு"
''கிறுக்கலா? தப்புமா..ஒவ்வொண்ணுக்கும் ஆஸ்ஹார் அவார்டே தரலாம்.. இப்படி ஒரு திறமை இருக்கு என்று எங்களுக்கு நீ சொல்லவே இல்லையே..." லலிதா ஆதாங்கத்துடன் குறைபட்டாள்.
''அய்யோ அக்கா நான் பொழுதுபோக்காக ஏதோ எழுதினேன்" சிணுங்கியவாறு சொன்னாள் மற்றவள்.
''எது? இதுவா பொழுது போக்குக்கு எழுதினேன்னு சொல்றே? ச்சுசூ..என்னமா எழுதியிருக்கே? ஒவ்வொண்ணையும் அனுபவிச்சு எழுதியிருக்கே.." மீனா சொல்ல தேன்மொழி முகம் செம்மை பூசியது.
அனுபவித்துத்தானே எழுதினாள். கணவன் கூட ஒரு முறை மொழிபெயர்த்து கூறு என்று கேட்டபோது, முடியாது என்று வெட்கம் கூட வந்து தடுத்ததே. பழைய நினைவுகள் வர அவள் முகம் அடுத்த நொடி இருண்டது. தோழிகள் பதறியவர்களாக,
''ஹேய்..தேன்..சாரி உன் பழையநினைவுகளை கிளறும் நோக்கம் அல்ல. உன் டேலண்ட பாராட்டணும் என்று தான்" லலிதா அவளது தோளை அணைத்தவாறு கூறினாள்.
''இட்ஸ் ஓகே..." என்றவாறு அவள் சகஜநிலைக்கு திரும்பினாள்.
''இப்போ என்ன பண்ண போறோம்னு தெரியுமா?" லலிதாவே கேட்டாள்.
''என்ன மேலும் எழுதுன்னு கேட்க போறீங்களா? ப்ளீஸ் அது மட்டும் வேண்டாம்.. என்னால முடியாது..எனக்கு இப்போ அந்த பீலிங்க்ஸ் எல்லாம் இல்லை.." என்றாள் உடைந்த குரலில். பெண்கள் மீண்டும் பதறியவர்களாக,
''நோ...செல்லம்..இந்த படைப்புகளை நாம பப்ளிஷ் பண்ண போறோம்.. நம்ம கோமதி மேடத்துக்கு தெரிந்த நிறைய பப்ளிஷர் இருக்காங்க..நீ சம்மதிச்சாலும் சரி, இல்லைன்னாலும் சரி. நாம பப்ளிஷ் பண்றதுன்னு முடிவுபண்ணிட்டோம்.." என்றாள் லலதா.