வண்டியை ராயப்பனின் கடை வர நிறுத்தினான்.
''இதுவா நீ சொன்ன டீக்கடை?" அஸ்வந்த் கேட்க,
''நம்ம ஊரு ஹோட்டல் இதுதான்" என அவள் சொல்ல, அவன் சிரித்தவாறு அவளை ஜீப்பிலிருந்து இறக்கிவிட்டான்.
ராயப்பன் இவர்களை கண்டதும் ஓடிவந்து,
''ஐயா நீங்களா? கும்புடுறேங்கய்யா.." என வணக்கம் சொல்ல அவனும் அதே பாணியில்''கும்புடுறேங்கய்யா" என்றான். தேன்மொழி சிரித்துவிட்டாள்.
''ரெண்டு காபி கிடைக்குமா?" என்றவன் தேன்மொழியிடம் திரும்பி,
''ஹனி..ஏதாவது சாப்புடுறாயா?"
''எனக்கு எதுவும் வேண்டாங்க!" என்றாள்.
''காலையிலேயே என் கூட வந்துட்டே இவ்வளவு நேரமும் தொண்டை நொந்திருக்கும்..நான் பெரிசா காபி குடிப்பது இல்லை.. பட் ஸ்விம் பண்ணா குடிப்பது வழக்கம்...ஒரு காபியாவது குடி" என்று விட்டு ராயப்பனிடம் திரும்பி,
''ரெண்டு காபி மட்டும் சுகர் குறைச்சு"
''இதோ கொண்டாந்திடுறேன்" என அவன் பறந்தான். அஸ்வந்த் பர்சை திறந்து பார்த்து பணத்தை எடுத்தான். காபி வர ரூபாய் தாளை நீட்டினான்.
''அய்யா..உங்ககிட்டே போய் நான் காசு வாங்கினா? நீங்க என் கடையில காபி குடிக்குறதே நான் செய்த புண்ணியம்ங்க..இது பெரியய்யா வைச்சு தந்த கடைங்க. உங்ககிட்டே பணம் வாங்குவேனா? வேணாம்.." அவன் மறுத்தான்.
''தப்பு சார்..இலவசமாக நான் எதையும் வாங்குவதில்லை..இந்தாங்க" என அவன் கையில் திணித்தவனாக காபியை ரசித்துக்குடித்தான்.
''ஹனி..டிவ்ரெண்டான டேஸ்டாக இருக்கு. நீ போடுவது எல்லாம் ஒரு காபியா?" என வம்புக்கு இழுக்க குடித்துக் கொண்டிருந்தவளுக்கு புரையேறியது.
''பார்த்து" என அவள் முதுகை தடவிவிட்டான். அவள் நெளிந்தவளாக,
''நான் போடுவது எல்லாம் நல்லா இருக்கு என்று இந்த வாய்தான் ரசிச்சு குடிச்சதாக ஞாபகம்.." அவள் சொல்ல,
![](https://img.wattpad.com/cover/246316545-288-k68933.jpg)