என்னில் நீயடி..! - எஸ்.ஜோவிதா அத்தியாயம் 85

1.3K 26 0
                                    

''உன்னை தழுவிய
காற்று
என்னை தழுவியது
என் ஜென்மபலனை
அடைந்துவிட்டேன்"

''ஹனி..நீ எனக்கு கிடைத்த புதையல்! கடவுளுக்கு நன்றி சொல்லணும்..! காதலை உணர வைத்தவளும் நீதான் கல்யாணத்தின் புனிதத்தை புரிய வைத்ததும் நீதான்".. மனைவியை பார்த்து சொல்ல அவளோ புன்சிரிப்புடன்.

''அமெரிக்கவாசியை, இந்தியவாசியாக மாற்றியதும் நீதான்னு சொல்லாம விட்டுட்டீங்க.."

''ஓ யெஸ்..யூ ஆர் கரக்ட்." அவன் சொல்ல, அவனை காதலுடன் பார்த்தவள்,

''உன்கிட்டே நானும் ஒண்ணு கேட்கணும்..." என்றவாறு முத்தமிட்டதை நிறுத்தியவனாக அவளை பார்த்தான்.

''ம்..கேளுங்க.".

''நீ கன்சீவ்வாகியிருக்கே என்று அப்பொழுதே ஏன் என்கிட்டே சொல்லலை?" கேட்டுவிட்டு அவளது முகத்தை பார்த்தான்.

"சொல்லியிருந்தா...அதனால வேறு பிரச்சனைகள் உருவாகுமே என்று பயந்தேன்.. அதைவிட." என்று விட்டு தயக்கத்துடன் அவனை பார்த்தாள். அவள் என்ன சொல்ல போகிறாள் என புரிய அவளது கண்களை நேரே பார்த்து,

''ஹனி..! யாரோ? எவரோ? பெற்றெடுத்த குழந்தைகள் மரத்துக்கு கீழே தூங்கிக்கொண்டிருக்கிறார்களே என்று கவலைப்பட்டு, அவர்களிற்கு காப்பகம் அமைத்து வழி வகுத்தவனா? என் குழந்தையை அழி என்று சொல்லி இருப்பேன்?" கணவன் கவலையான குரலில் கேட்டதும், அவள் பதறியவளாய் அவனது கரங்களை எடுத்து,

''இல்லைங்க..அதை நான் யோசிக்கவில்லை.. என்னை பிடிக்கவில்லை! என் மேலே பீலீங்ஸ் இல்லை..! என்னை மனைவியாக நினைத்ததே இல்லை! என்பவரிடம் எப்படி நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று துணிந்து சொல்வது? அதைவிட நீங்க இருந்த மனநிலையில் அப்படி ஏதாவது சொல்லிவிடுவீர்களோ என்று எனக்கு கெட்ட கெட்ட கனவாகவே வந்து பயம்காட்ட..எனக்கு எதனால் தொந்தரவுக்கு மேல் மேலும் தொந்தரவு?"

''......"

''உங்க வாழ்க்கைக்கு இடைஞ்சலாக நான் இருக்குறேன் என்று நீங்க சுட்டிக்காட்டிய பின், என் குழந்தையையும் காட்டி மேலும் உங்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதா? என்றுதான்.." என இழுத்தவாறு அவனை பார்த்தாள்.

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now