அஸ்வந்த் தன் வீட்டுக்குள் நுழைந்தான். ஜுலியானா ஹாலில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உட்கார்ந்து இருக்கும் தோரணையே இவனுக்கு எரிச்சலை கிளப்பியது.
''ஓ காட்..இவ கூடவா ஆயுசு முழுதும் வாழ வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றேன்? இவளுக்காகவா ஹனியை தூக்கி எறிந்தேன்.? எதனால்? எதைக்கண்டு? என்னோட பேரண்ட்சை பழிவாங்கவேண்டும் என்பதற்காக. அவங்க செலக்ட் செய்தது ஹனி என்பதாலா? என்னை உதைக்க வேண்டும்..அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்று தெரிந்தும் எவ்வளவு பாவச்செயல் செய்து விட்டேன்?" அவன் மனதுக்குள் புழுங்கியவாறு அறைக்குள் நுழைந்து தனது லக்கேஜை எடுக்க, ஜுலி பின்னால் வந்து கதவை சாத்தினாள். அவனுக்கு சினம் எட்டிப்பார்த்தது.
''என்ன ஜுலி எதற்கு டோரை குளோஸ் பண்றே?" எரிச்சலை அடக்கியவாறு கேட்டான்.
''டார்லிங்...நீ வந்ததில் இருந்து சரியில்லை.. என்னாச்சு உனக்கு ? காலையில கண்விழிச்சு பார்த்தா உன்னை காணலை..ஃபோன் போட்டா அட்டெண்ட் பண்ணமாட்டேங்கிறே.. என்னைப்பத்தி ஏதாவது உனக்கு தெரியவந்ததா?" என்றவாறு அவள் அமைதியாக கேட்க, அஸ்வந்த் ஒன்றும் சொல்லாது தனது ஆடைகளை வைத்து சூட்கேசை மூடினான்.
''டார்லிங் கேட்கிறேனே கமான் பதில் சொல்லேன்.."
''தெரியவந்தாலும், வரலைன்னாலும் எனக்கு நோ அப்ஜெக்சன். ஜுலி.." அவன் தீர்மானமாக கூற அவள் முகம் சுருங்கியவள்,
''வாட் யூ மீன்?"
''ஐ மீன் மை லைவ் .. நாட் வித் யூ..வி ஆர் நாட் லவ்வர்ஸ்..பிரண்டாக இருந்திடலாம்;." என்றான்.
''யா..ஒய் நாட்..இதைத்தானே நானும் கேட்டேன்..." என்றாள் அவனருகில் வந்து கைகளை மாலையாக அனது கழுத்தில் போட்டு.
லிவிங் டூ கெதர் போல இருக்க அவன் சம்மதித்து விட்டான். என்ற அர்த்ததில் அவன் சொல்கிறான் என எண்ணியவளாக கிறக்கமாக பார்த்தாள்.''நோ...ஜூலி...இல்லை...ஜஸ்ட் பிரண்ட்..." என்றவாறு அவளது கைகளை தனது கழுத்தில் இருந்து எடுத்தவனாக தொடர்ந்தான்.