என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா அத்தியாயம் 1

3.8K 46 0
                                    

1

காலைப்பொழுது பனிமூட்டத்தில் இன்னும் விடியாத இரவு போல காட்சியளித்தது. எனினும் நியூயார்க் நகரத்தின் பரபரப்புக்கு குறைவில்லை. நாசிகளின் வழியே நுழைந்து உயிரையே நடுங்க வைக்கும் குளிரிலும் மக்கள் அதை ஒரு பொருட்டாக எடுக்காமல் தத்தம் வேலைகளுக்கு சென்றுகொண்டிருந்தனர். அந்த அதிகாலைப்பொழுதில் மனைவி பேசுவதையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் பலத்த சிந்தனை வசப்பட்டிருந்தார் வேணுகோபால். மாநிறம்ஐம்பத்தெட்டுவயதிலும் இளமையாக கட்டுடலுடன் இருந்தார்.

'என்னங்க நான் சொல்வது எதுவும் கேக்குறது இல்லைன்னு முடிவு பண்ணீட்டீங்களா?" தேவகி கணவரின் முதுகை பார்த்துக்கூறினாள். ஜன்னல் ஊடாக கொட்டும் பனிக்கட்டிகளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த பார்வையை மனைவி மேல் எறிந்தார்.

மும்பையில் பிறந்தவள் ஏற்கனவே சிவந்த நிறமுடையவள் குளிரால் இன்னும் சிவந்து இருந்தாள். தொந்தியோ இதர வழிந்து விழும் தசைகளோ இல்லாமல் இருபத்தியெட்டு வயது வாலிபனுக்கு தாயா? என புருவம் உயர்த்த வைக்கும் குடும்பத் தலைவி.

'இல்லை தேவகி...நீ சொல்றது எதையும் நான் கேக்குற நிலமையில் இல்லை! எல்லாம் காலம் கடந்து போச்சு...கண்களை மூடிக்கொண்டு இருந்திட்டேன்..இனி என்ன செய்வதென்றும் தெரியவில்லை". கவலை தேய்ந்த குரலில் சொன்ன கணவரின் அருகில் வந்தாள் தேவகி.

'இல்லைங்க...! எதுவும் கடக்கலை..! காலங்கள் இன்னும் இருக்கு! இந்த மட்டுமாவது நமக்கு கண் திறந்திச்சே..அதை நினைச்சு சந்தோசப்பட்டுக்கோங்க..!" கணவரின் கைகளை பிடித்துக்கொண்டு அவள் கூற, அவளிடமிருந்து விலகியவராய் மறுபடியும் ஜன்னல் அருகே நின்று கொண்டு வெளியே பார்வையை எறிந்தார்.

'இதபாருங்க..நான் சொல்லும் திட்டத்துக்கு நீங்க ஒத்துக்கிட்டா எல்லாம் நல்லபடியே நடக்கும்..." சொல்லியவாறு கணவரின் அருகே வந்தாள். மனைவி பக்கம் திரும்பியவராய்,

'ம்..சரி..என் வழி எதுவும் எடுபடவில்லை..உன் வழிக்கே வந்துடுறேன்.." அவர் சொன்னதும் தேவகி முகம் பிரகாசமடைந்தது. ஏதோ சொல்ல உதடு திறந்தாள்.

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாOpowieści tętniące życiem. Odkryj je teraz