மாளிகையிற்குள் நுழைந்த அஸ்வந்த் ஒரு குளியல் போட்டான். வெளித்தோட்டத்தில் பெரியவர்களுடன் ஜோசியரும் அமர்ந்திருந்தார். யாராக இருக்கும் என்று யோசித்தவாறு அங்கு வந்து சேர்ந்தான்.
அவர்கள் எதையோ சீரியசாக விவாதித்து முடிவு எடுக்க முடியாமல் ஆழ்ந்த மௌனத்தில் இருப்பது போல தென்பட்டது அவனுக்கு.
தான் வந்ததும் உற்சாகமாக குரல் கொடுக்கும் தாத்தா எழுந்து நின்று குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். தேவகி வேணுகோபால் கவலை தேய்ந்த முகத்துடனும் , அதைவிட வள்ளியம்மை கவலையான முகத்துடனும் இருக்க, ஜோசியர் அவருக்கு முன் இருந்த தாள்களை புரட்டுவதும் உதட்டை பிதுக்குவதுமாக இருந்தார்.
அஸ்வந்த் குழப்பத்துடன்
'தாத்தா! வாட் ஹேப்பண்ட்? எல்லோரும் சைலண்டா இருக்கீங்க? எனித்திங் சீரியஸ்?" அவன் கேட்டபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்த தாத்தாவை பிடித்து நிறுத்தினான்.
பரமசிவம் பேரனின் முகத்தை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு பெருமூச்சு ஒன்றை எறிந்தவராக அவனிடமிருந்து விலகினார். அஸ்வந்த் புரியாதவனாக தாயிடம் நேராக வந்தான்.
'மம்மி என்ன பிராபளம்? ஏன் எல்லோரும் பேசாம இருக்கீங்க?" தாயின் கரத்தை எடுத்து தன் கைகள் மீது வைத்தபடி கேட்டான். தேவகி மகனிடமிருந்து கைகைளை உருவியவள் அவனை பார்த்து,
'எல்லாம் உன் மேரேஜ் விசயம் தான்"
'அதுக்கு என்னம்மா? எனிதிங் பிராபளம் ?" அவன் விழிகள் சுருங்க கேட்டான்
'பிராபளம் என்று இல்லை பட்.." வேணுகோபால் இழுத்தார்.
'அப்புறம் என்ன டாட்? எதுன்னாலும் பேசினாத்தானே புரியும்! பேசிடுங்க ப்ளீஸ்" அவன் குழப்பமான பார்வையை ஒவ்வொருத்தர் மேலேயும் எறிந்தான்.
'பேராண்டி! நீ ஆசைப்பட்ட பெண்ணை மேரேஜ் பண்ண எவரும் மறுக்கலை!" பரமசிவம் உதடு திறந்தார்.
'ஓ தாங்க் காட்..அப்புறம் என்ன தாத்தா?" அவன் தனது செலக்சனுக்கு எல்லோரும் சம்மதம் தந்த சந்தோசத்தில் அவரிடம் துள்ளலுடன் வினாவினான்.
![](https://img.wattpad.com/cover/246316545-288-k68933.jpg)