என்னில் நீயடி...! எஸ்.ஜோவிதா அத்தியாயம் 38

949 25 0
                                    

வள்ளியம்மை பழங்களை வெட்டி வந்து கணவர் முன்னால் நீட்டினார். பரமசிவம் மனைவியை இழுத்து முத்தமிட்டார்.

''ச்சீ..என்ன விவஸ்தை கெட்ட காரியம் பண்ணிகிட்டு இருக்கீங்க? பிள்ளை இல்லாத வீட்டில கிழவன் கூத்தடிக்குற கதையா?" அவர் முகம் சுளித்தவராக திட்ட,

''அடியேய் என் தர்மபத்தினி! எனக்கு இருக்குற சந்தோசத்துக்கு உன்னை தூங்கி சுத்துவேன். நீ இருக்குற சைசுக்கு என்னைத்தான் தூக்கி சுத்துவே போலிருக்கு" அவர் சொல்ல,

''ச்சீ..முதல்லே விசயத்தை சொல்லுங்க.."

''எனக்கு ஒரு பயம் இருந்திச்சு எங்கே தேன்மொழி முன்னாடி நீ பரிகாரம் செய்ய வந்தவள் தானே ? என்று கேட்டு வைச்சுடுவானோ, இல்லை அந்த வெள்ளைக்காரியை பத்தி பேசிடுவானோ என்று"

''அது எப்படி? நாம தான் சொல்லி வைச்சுருக்கோமே சத்தியம் வேறு வாங்கியிருக்கோமே..அப்புறம் பரிகாரத்துக்கு பலன் இல்லாம போயிடும் என்று வேறு ஒரு கதை அளந்துவிட்டிருக்கோம்.."

''ஆமா..அவனுக்கு நம் கலாச்சாரத்தை பத்தி தெரியாததால தப்பிச்சோம்..அதுவும் ஒரு வித நன்மைக்குத்தான்.. ரொம்ப பயமுறுத்தியதால தான் தேன்மொழி கழுத்தில தாலி கட்டவே சம்மதிச்சான்... ஆனா...எந்தளவுக்கு அவங்களுக்குள்ளே உறவு இருக்குன்னு அறிய முடியலை..என்ன பண்றது?" அவர் சொல்ல,

''நான் வேணுமுன்னா தேன்மொழிகிட்டே கேட்டுப்பார்க்கவா?''

''என்னெண்ணு?"

''உங்களுக்குள்ளே எதுவாச்சும் நடந்துச்சா? சந்தோசமா இருக்கீயா என்று."

''போடி வெவரங்கெட்டவளே! அப்புறம் அந்த பொண்ணு சந்தேகத்தோடு ஏன் பாட்டி ஏதாவது பிரச்சனையா? என்று வாயைகிளற ஆரம்பிச்சிடும் புத்திசாலிப்பொண்ணு.. நீயா மாட்டிக்காதே.."

''ம்...அவ முகத்தில ரொம்ப சந்தோசம் நிறைவாக தெரிகிறது..அதை வைச்சுத்தான் நான் நினைச்சேன் அவங்களுக்குள்ளே கட்டில் உறவு கூட இருக்கும் என்று."

''பலே..என் பொண்டாட்டி கூட துப்பு துலக்க ஆரம்பிச்சட்டா..ஆமா நிஜமாவா சொல்றே?" என ஆவலுடன் கேட்டார் .

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாOnde histórias criam vida. Descubra agora