என்னில் நீயடி..! - எஸ்.ஜோவிதா அத்தியாயம் 82

1K 24 0
                                    

தேன்மொழிக்கு கணவன் எப்பொழுது திரும்பி வருவான்?. அந்த இரவு அவளுக்கு சீக்கிரம் விடிந்து விடாதா?. என்று இருந்தது.

அவள் நினைத்தது போல இரவும் சட்டென்று விடிந்தது. குழந்தையின் கடமைகளை முடித்ததும், அதை வள்ளியம்மை வாங்கிக்கொள்ள,

தேன்மொழி அழுக்கான ஆடைகளுடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.

தூங்காமல் இருந்து கண்களுக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது. நன்றாக குளித்தாள் மனமோ

''ஊரை சுற்றி பர்ர்த்து சைட் அடிக்கலாம்.." என கணவன் சொன்னதை நினைத்துப்பார்த்தது.

''ம்...அய்யா நல்லா ஊரை சுற்றிக்கொண்டு இருக்கிறார் போல, வரட்டும், வரட்டும் இருக்கு இன்னிக்கு.." மனதுக்குள் செல்லமாக திட்டியவாறே குளித்தாள்.

அஸ்வந்த் காலை ஆறுமணிக்கே வந்து குளித்துவிட்டு மனைவியை தேடி போனான். குளியலறையில் சத்தம் கேட்க இவன் ஓசைப்படாது வெளிக்கதவை தாழ்ப்பாள் போட்டவனாக கட்டிலில் வந்து ஒய்யாரமாக சாய்ந்திருந்து தேன்மொழி வெளியே வர காத்திருந்தான்.

தேன்மொழி டவலை எடுத்து சுற்றியவாறு வெளியே வந்தவள் கண்களில் கணவன் அமர்ந்திருப்பது தெரிய,

''ஹேய்..எப்...எப்போ வந்தீங்க?" அவள் ஆனந்த அதிர்ச்சியில் வினாவினாள்.

''ம்..நான் ஆறுமணிக்கே வந்துட்டேன். மேடம் இப்போதுதான் எழுந்திரிச்சீங்களோ?" கேட்டவாறு அவன் எழுந்து வந்தான்.

''இல்லைங்க! குழந்தைக்கு குளிப்பாட்டி... வேலை முடிச்சு வர லேட்டாயிடுத்து" என சொல்லிமுடிக்க, அஸ்வந்த் அவளது இடையை இழுத்து தன்னுடன் அணைத்திருந்தான்.

டவலுடன் தான் நிற்பதும், கணவனது பிடிக்குள் சிறைபட்டதும் அப்பொழுதுதான் அவளுக்கு உறைத்தது. முகம் சிவக்க விலக பார்த்தாள்.

''ம்ஹூம்...ஹனி..நீ என்ன திங்க் பண்ணிட்டு இருக்கியோ..அதே தான் நானும்.." என அவன் அவள் உதடு நோக்கி குனிய, கணவனது நோக்கமும் அவளுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பெண்மையும் விழித்துக்கொள்ள, தடுக்க தோன்றாது அவனது விரல் தீண்டல்களுக்கு இடம் கொடுத்தாள்.

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now