''வேணு இதில இருக்குற பொருட்களை நாம வழக்கமாக வாங்குற கடைக்கு போன்லே ஆர்டர் கொடுத்துடு! அவங்க வண்டியில வீட்டுக்கு டெலிவரி பண்ணிடுவாங்க.. அப்புறம் பழங்கள் எல்லாம் நம்ம தோட்டத்தில பறித்துக்கலாம்." பரமசிவம் போட்டு வைத்த லிஸ்டுகளை பிரித்து வைத்து ஆளாளுக்கு கொடுத்துக்கொண்டிருந்தார்.
''பேரா தேன்மொழிக்கு அவ தோழிங்க ஆசிரமத்து பிரண்டாம் அவங்களை போய் அழைச்சுட்டு வரணும்..வீரா கூட நீயோ ரோஷனோ போனால் நல்லது. பொண்ணுங்களை பத்திரமா அழைச்சுட்டு வரணும்"..
''தாத்தா அவங்களை அழைச்சுட்டு வருவது எங்க பொறுப்பு ரோஷன்" சொல்ல,
''ஏம்பா வீராவை அழைச்சுட்டுப்போங்க ரூட் அத்துப்படி"
''ஏன் எனக்கு ரூட் தெரியாதாக்கும்.? நான் வண்டியை ஓட்டுறேன். பெரிய நியூயார்க் நெடுஞ்சாலை, வழி தடுமாறி நாங்க எங்கேயோ போயிடுவோம்" அஸ்வந்த் கிண்டலாக சொல்ல,
''சரி சரி உன் இஷ்டம். அப்புறம் பொண்ணுங்களா நீங்க வேலைக்காரங்களை சேர்த்துகிட்டு அன்னதானம், பொங்கல் வேலைகளுக்கான வேலையை பார்த்துக்கோங்க.." பரமசிவம் பெண்களை பார்த்து சொன்னார்.
''அவங்க அவங்க அங்க லிஸ்டை பாலோ பண்ணா சரி.." வேணுகோபால்.
ஒவ்வொரு பிரிவாக பொறுப்புகள் பிரித்துக்கொடுக்கபட்டது.விடிந்தது பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கத்தொடங்கின. தேன்மொழி பாட்டி வீட்டுக்கு கிளம்ப தயாரானாள். அஸ்வந்த் அவளை கொண்டு போய்விட தயாராகியவன் வெளியே வந்து,
''ரோஷ்..நீ உன்னோட மொபைலை மறக்காம எடுத்துக்கோ. சிட்டிக்கு போறே பார்த்து டிரைவ் பண்ணு..எத்தனை பேர் வருகிறார்கள் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றாற் போல வண்டியை எடுத்துக்கலாம்" அவன் பேச,
''நாலைந்து பேர் தாம்பா அதனால நம்ம வேனை எடுத்துக்கோங்க.. துணைக்கு வேணுவும் போகட்டும்" பரமசிவம் குறுக்கிட்டு, சொன்னார்.
''கரக்ட் ரோஷ் நீ பெரிய வேனை எடுத்துக்கோ. ஏதாச்சும் டவுட் வந்தா எனக்கு கால் பண்ணு. டாட் உங்க மொபைலை என்கிட்டே தாங்க.." அவரிடமிருந்து வாங்கி பாக்கெட்டில் போட்டான். நண்பன் பக்கம் திரும்பி,