தேன்மொழியோடு ஜீப்புக்கு வந்தான்.
''என்னங்க"
''என்ன ஹனி?"
''இந்த புடவையை மாத்திட்டு வரட்டா?" அவள் கிளிக்கு கிழித்து கட்டுப்போட்ட பகுதியை சுட்டிக்காட்டியவாறு கேட்டாள்.
''ம்.." என்றவன் அவள் போக எத்தனிக்க அவனையும் மீறி உதடு முந்திக்கொண்டது.
''ஹனி நான் கட்டிவிடவா?" அவன் குரல் கேட்க திரும்பி பாராமல்,''வேண்டாம் ராசா!" என ஓட்டமாக ஓடிப்போனாள்.
அஸ்வந்த் தன் உதட்டுக்கு ஒரு செல்ல அடி கொடுத்து காரில் ஏறி உட்கார்ந்தான். அடுத்த ரெண்டாவது நிமிடத்தில் அவள் ஆஜராக,''ஹேய் என்ன இவ்ளோ ஸ்பீடாக டிரஸ் மாத்திட்டே?" அவன் ஆச்சர்யத்துடன் வினாவ,
''க்கும் இந்த புடவை சுத்துறதுக்கு எதுக்கு ரெண்டு மணி நேரம்?"
''ஏன் ஹனி! நீ இந்த மார்டன் டிரஸ் பேண்ட், ஜீன்ஸ், டிசர்ட் எல்லாம் போடமாட்டியா?" காரை ஸ்டார்ட் செய்தவாறு கேட்டான்.
''எதுக்குங்க இந்த விபரீத எண்ணம்?"
''இல்லை இந்த காஸ்டியூமில உன்னை பார்த்தாச்சு, மத்த காஸ்டியூமில எப்படி இருப்பேன்னு தெரிஞ்சு கொள்ளத்தான்"
''இது தான் நம்ம தேசிய உடை! நீங்க சொன்ன டிரஸ் எல்லாம் உங்க நாட்டு, நம்ம பட்டணத்து கல்ச்சர்"
''ம்..பட்...எனக்கென்னமோ இந்த டிரஸ்சில செக்சி அதிகமாக இருக்குன்னு தோணுது"
''என்னது?" அவள் அதிர்வுடன் கணவனை
பார்த்தாள்.''இல்லை! உன்னோட ஹிப்..வயிறு எல்லாம் தெரியுறது மாதிரி காட்டுற ஒரு காஸ்டியூம் உனக்கு செக்சியாக தெரியலையா? பாடியை மறைப்பது போல இருக்குற ஜீன்ஸ் டிசர்ட் உனக்கு செக்சியாக இருக்குமா என்று கேட்குறேன்.."
''அதெல்லாம் எனக்கு தெரியாது இந்த உடை தான் நாகரீகமான மங்களகரமான உடை! இதைப்போய்...'' அவள் முறைப்புடன் முகம் திருப்பிக்கொள்ள,
''பட்..எனக்கு இந்த டிரசில உன்னை பார்த்தா எனக்கு என்னவோ தோணுது!" அவன் முணுமுணுக்க அவள் திரும்பி,
![](https://img.wattpad.com/cover/246316545-288-k68933.jpg)