இந்தியா.
பரமசிவம் மாளிகை. வள்ளியம்மை எல்லாம் சொல்ல , பரமசிவம் உணர்ச்சிப்பிழம்பாக எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.
பின் மகனது படத்துக்கு எதிரே வந்து நின்று பார்த்தவர் முகம் கோபத்தில் கொந்தளித்தது. பின் பேரனின் சிறுவயது படங்கள் அழகாக பிரேம் போட்டு ஒவ்வொரு இடத்திலும் மாட்டியிருக்க, ஒவ்வொன்றையும் பார்த்தவர், இறுதியில் அவனது பதினாறு வயது போடடோவில் வந்து நின்றது அவரது பார்வை. கையில் பரிசுக்கோப்பை ,கழுத்தில் தங்க மெடல், என கம்பீரமாக போஸ் கொடுத்து கொண்டிருந்தான் அஸ்வந்த். அந்த போட்டோவை வருடியவர்,
'வள்ளி இந்த முகத்தை பாரு! நிதமும் இதில் விழித்து இதையே பார்த்தபடி காலம் கடத்திட்டோம்..இந்த முகம் இப்போ இங்கே வரப்போகுது..எனக்கு பத்து வயசு குறைஞ்சுட்டுது போல் இருக்கு..சந்தோசத்தில் உன்னை தூக்கி சுத்தணும் போலிருக்கு.."
'ஆத்தாடி!" வள்ளியம்மை வெட்கப்பட, பரமசிவம் மீசையை முறுக்கியவாறு,
'பாண்டி, வேலு, வீரா, வெள்ளை, பார்வதி எல்லாரும் வாங்க இங்கே!"அவர் கூவிய கூவலில் தோட்க்காரனிலிருந்து சமையயல் காரி வரை அடுத்த நிமிடம் அவர் முன்னால் ஆஜரானார்கள். எல்லோரும் பவ்வியமாக அவரை பார்க்க, அவர் கம்பீரமாக மீசையை முறுக்கியவாறு
'உங்க எல்லாருக்கும் இந்த மாசத்திலேருந்து டபுள் மடங்கு சம்பளம்.." அவர் சொல்ல, வேலைக்காரர்கள் கை கூப்பியவாறு,
'எங்க எசமான் நீங்க நல்லா இருக்கணும்." வாழ்த்தினார்கள்.
'இந்த கிழவனை வாழ்த்துறதை விடுங்கடா என் பேராண்டி வர்றாண்டா.. அவனை வாழ்த்துங்கடா! இந்த மாளிகையை மாத்தியமைக்கணும்! எங்கும் சுத்தப்படுத்துணும்.. என் பேரனுக்கு ஒரு தூசி கூட இருக்குறது பிடிக்காது! ஊர் முழுக்க சுத்தமாகணும்.."
'அய்யா..நம்ம ஊரு என்னிக்கய்யா சுத்தம் இல்லாம இருந்திச்சு.." டிரைவர் வீரா தலையை சொறிந்தவாறு கேட்டான் .