பரமசிவம் மாளிகை.
எல்லோரது முகம் முழுதும் சந்தோசம் பாதியும், பயம் பாதியுமாக, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மூலையில் இருக்க. ரோஷனும், கீதாவும் அவர்களை பார்ப்பதும், அஸ்வந்தை பார்ப்பதுமாக இருந்தனர்.
அஸ்வந்த் தலையில் கை வைத்தவாறு மாடிப்படிகளில் அமர்ந்திருந்தான்.
ஊர் வந்தததும் முதல் வேலை தேன்மொழியை பார்த்து அவளிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என துடித்தது அவன் மனம்.
அவள் தன்னை வழியனுப்பியதோடு காணாமல் போய்விட்டாள். என செய்தி கேட்டதும் அவன் இடிந்து போய் உட்கார்ந்துவிட்டான். தனக்கு சொல்லாமல் மறைத்து பொய் சொன்ன பெரியவர்கள் கோபம் எழுந்தாலும், அவர்களும் தனது நலன் கருதியே அப்படி செய்தார்கள் என்று மனது வாதாட கலக்கத்துடன் யோசித்தான்.
பெரியவர்களோ அவன் திரும்பி வந்ததை இட்டு மகிழ்வதா? இல்லை காணாமல் போன மருமகளை நினைத்து கவலைப்படுவதா ? இருவரின் வாழ்க்கையில் விதி விளையாடுவதை நினைத்து ஆதாங்கப்படுவதா? ஏன தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தனர்.
''டாட்..நீங்க அவள் அப்படி ஒரு லெட்டர் எழுதிவிட்டாள். என்பதற்காக தேடாமல் இருந்திருக்க கூடாது. அவளுக்கு தெரியாமல் தேடி இருக்கலாம் அல்லவா? ஏம்பா செய்யலை?" மகன் குற்றம் சாட்டும் தொனியில் கேட்க,
''இல்லைப்பா...நாங்க தேடிகிட்டுத்தான் இருந்தோம். அவளது ரெண்டவாது கடிதம் வரும் வரை. அவ தானாக ஒரு வாழ்க்கையை தேடி சந்தோசமாக இருக்கேன். என்று சொன்ன பின்.. அதை கெடுக்கும் விதமாக தேடிக்கண்டு பிடித்து, நம்ம கூட வைத்திருந்து, மறுபடியும் அவ வாழ்க்கையை பாழாக்க வேணுமா? என்கிற ஒரே காரணத்துக்காத்தான்.. நாம எல்லா முயற்சியையும் கைவிட்டோம்"
''டாட்..மறுபடியும் மறுபடியும் அவ இன்னொரு லைவ்வை தேடி இருப்பா என்று சொல்லாதீங்க! எனக்கு செத்துடலாம் போலிருக்கு..என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை!" தழுதழுத்தான்.