என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா அத்தியாயம் 3

1.4K 36 0
                                    

ஆயிற்று வந்து இருபத்தியெட்டு வருடங்கள் ஓடிப்போனது. இதில் அவர்கள் இந்தியாவிற்கு சென்றதை விரல் விட்டு எண்ணலாம். சென்ற புதிதில் அடிக்கடி கடிதம் போட்டார்கள்.

தொலைபேசி இலக்கத்தையும் குறித்து அதன் பின் வெள்ளிக்கிழமைகளில் இருவரும் பட்டணம் சென்று பேசினார்கள். அதுவும் ஒன்று ரெண்டு தடவைகள் தான். அதன் பின் அவர்கள் போனாலும் ஃபோன் செய்தாலும் எடுப்பதற்கு ஆட்கள் இல்லாமல் போனது.

வேணுகோபாலும் , தேவகியும் படித்துக்கொண்டே தம்மை ஒப்பந்தம் செய்த சாப்ஃட் வேர் கம்பெனிக்கு உழைக்க வேண்டியதாகிப்  போனது. அதனால் இரவு, பகல் என்று இல்லாமல் ஒரே ஒட்டத்தில் வாழ்க்கை சுழன்றது. வந்த வருமானத்தில் வீட்டு வாடகை கட்டவும், இதர செலவுகளுக்கு ஈடுகட்டவும் சரியாக இருந்தது.

அதன் பின் இருவருக்கும் உள்ள திறமைக்கு பதவி உயர்வு கொடுத்து வீடும், காரும் செய்து கொடுத்தது கம்பெனி. பதவி உயர்வுக்கு பின் ஒருவரை , ஒருவர் பார்த்து நலம் விசாரிக்க முடியாத அளவுக்கு வேலைப்பளு, சேர்ந்து உணவு உண்ண முடியாத அளவுக்கு ஓட்டம் என்ற நிலையானது.

இருவரும் சேர்ந்து ஒரு சாப்ஃட் வேர் கம்பெனியை உருவாக்கும் ஆரம்ப கட்டத்திற்கு வந்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்திலும் தேவகியும் கருவுற்றாள். என்ன தான் லட்சியம் , கனவு என்று இருந்தாலும் தாய்மை பேறு கிடைத்தவுடன் அவளுக்கு மற்றவைகள் எல்லாம் ரெண்டாம் பட்சம் என்றானது. ஆனால் வேணுகோபாலோ ருத்திர தாண்டவம் ஆடாத குறையாக,

'தேவகி...நம்ம லட்சியம் எல்லாம் கை கூடி வர்ற இந்த நேரத்தில இது தேவையா? நீ இதனால முடங்கிப்போனா... நாம ஆரம்பிக்க போற கம்பெனி எப்படி முன்னேறும்? எப்படி டெவலப் ஆகும்? அதனால் இது இப்போ வேண்டாம்" அவர் சொல்ல , தேவகியோ எதுவும் பேசாமல்

'நாம ஊருக்கு திரும்பிடலாம்? எதுக்கு இங்கே இப்படி ஓடணும்? உங்களுக்கு இல்லாத சொத்தா? நம்ம பிள்ளை நம்ம இந்தியாவில பிறக்கட்டும்...எனக்கு இங்கே பிடிக்கலை"

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாOnde histórias criam vida. Descubra agora