அமெரிக்கா,
அஸ்வந்த் போனை வைத்துவிட்டு எழுந்து ஜன்னலோரமாக போய் நின்றான். அவனது மனது பல விதமான உணர்ச்சி குவியலுக்குள் ஆட்கொண்டிருந்தது. நண்பன் மௌனமாக இருப்பதை பார்த்து,
''அஸ்..புரியுதடா..நீ என்ன பீலிங்ஸ்ல இருக்கே என்று. எல்லாம் விதி தான். நீ இங்கு திரும்பி வரணும் என்று இருந்து இருக்கு. நீ வருவதற்காகவே இந்த பிராபளமும் காத்திருந்திருக்கு..என்ன சொல்வது என்று தெரியலை. ''
''உண்மைதான்டா''
''எப்படியும் ஒவ்வொரு கம்பெனியையும் வருசக்கணக்கில் இருந்து, முடிஞ்சு போன அஞ்சு வருசக்கணக்குகளை இவங்க செக் பண்ற லட்சணத்தை வைச்சு பார்த்தா... எப்படியும் ஒரு ஆறு மாசத்துக்கு மேல இழுத்தடிச்சுடுவாங்கடா.'
'' ஆமாம்டா'' அஸ்வந்த் நெற்றியை தேய்த்தவாறு சொன்னான்.
''அந்த ஸ்டீவன் நல்லா பிளான் போட்டு அவன் அங்கிள் மூலம் நம்மை பிளாக் பண்ணிட்டான். பார்த்தியா அவன் சொன்னது போல இது பெரிய தலைவலிதான்...நாம நம்ம வக்கீலை பார்ப்போமா? " ரோஷன் கேட்க அஸ்வந்த் திரும்பியவனாக,
''எப்படிடா? நமக்கு ஏதாச்சும் அவங்க நோட்டீஸ் விட்டால் தானே நம்ம வக்கீல் ஆஜராக முடியும்... அவசியமே இல்லாமல் அவங்க வேற நோக்கத்தோடு இன்காம் சர்வீசை அனுப்பி இருக்குறாங்க..இவங்க ஒவ்வொண்ணா செக்கிங்க் செய்து, ஏதாச்சும் தப்பா இருந்தா கண்டு பிடிச்சு, அதுக்கு பிறகு அவங்க ஒரு அறிக்கை தயாரிச்சு, அப்புறம் ஒவ்வொண்ணாக கிளியர் பண்ணி..அது ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும் கடைசி கட்டம் தான் வக்கீல் வாதாட்டம்.. ''
''ஆமாம்டா அப்படி ஒண்ணு இருக்குல்லே '''.பட்...இவ்வளவும் செய்து முடிவதற்குள் எனக்கு டிப்ரஷன் உச்சிக்கு போயிடும்...அவன் புத்திசாலியாக காய் நகர்த்தியிருக்கான்..பட் நான் முன்னைய அஸ்வந்த் என்றால் முழு மூச்சாக இதில இறங்கி, எவ்வளவு காலம் ஆனாலும் பார்த்துடலாம் என்று இருந்திருப்பேன்..."
''அந்த ஸ்டீவன் ஜெயிச்சமாதிரி தான்''
''பட்..என் பாதி மனது இங்கே இல்லைடா...பாதி பிரைன் என்கிட்டே இல்லை...இது எனக்கு ஒரு வீக்காகவே தெரிகிறது...எப்படியும் முழு மனதையும் இங்கு இந்த நேரத்தில் கான்சன்ரேட் செய்யணும்.. செய்வேன்... முடியணும்... அதுதான் என் யோசனையே..."