வணக்கம் வாசக கண்மணிகளே 🙏🏼
பாகம் இரண்டு வேணும் என்று கேட்டு எழுத்தாளர்ஜியை ரவுண்டு கட்டி திணற வைத்ததன் ரிசல்ட் !!
பாகம் இரண்டு இதோ இன்னும் சில மணித்தியாலங்களில் ...
எழுதுவதே வாசகர்கள் படிக்க தான்
எழுத்தாளர் ஜி பிஸிக்கு மேல துண்டு போட்டு நடக்கும் ஆள் , அவரின் அனுமதியோடு
எல்லா நாவல்களும் இங்கே வரும் !நியூயார்க் விமான நிலையம்.
அஸ்வந்த் வெளியே வந்தவன் பார்வையில் ரோஷன் தெரிய கைகாட்டியவாறு அவனை நோக்கி நடந்தான். ஒரு மணிக்கு முன்பாகவே ரோஷன் வந்து காத்து இருந்தான். நண்பனை காணும் ஆவலை விட, அவனது மனது அவன் மேல் எழுந்த கோபந்தான் அதிகமாக இருப்பதை உணர்ந்தவனாக தன்னை கஷ்டப்பட்டு அடக்கியவானக நண்பனை எதிர்கொண்டான்.
''ஹாய் ரோஷ் எப்படிடிடா இருக்கே?" அவனை கட்டியணைத்தவாறு கேட்டான்.
''ம்..இருக்கேன்..டிராவல் எப்படி இருந்திச்சு?"
''பச்..அதுக்கென்ன..போரடிச்சுகிட்டு இருந்திச்சு.." என்றவாறு காரில் ஏறி அமர ரோஷன் பேசாமல் காரை ஸ்ரார்ட் செய்தான்.
கார் நெடுஞ்சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றது. அஸ்வந்த் முகம் இறுகிப்போய் இருந்தை ரோஷன் கவனித்தவனாக எதுவும் கேட்காமல் மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தான்.
''அஸ்வந்த்.. நீ குளிச்சுட்டு ரெஸ்ட் எடு.." என அவனது ரூமை காட்டியவாறு சொல்ல, அவனும் தலையாட்டியவாறு சென்றான். கீதா கிச்சனிலிருந்து வர,
''அம்மா..நீங்க அவன்கிட்டே எதுவும் கேட்கக்கூடாது."
''சரிப்பா..நீயும் குளிச்சுட்டு வா சூடா டிபன் எடுத்து வைக்குறேன்.." என்றவாறு அவள் சென்றுவிட, ரோஷன் தனது செல்லில் அஸ்வந்த் வந்து சேர்ந்துவிட்டான். என வேணுகோபாலுக்கு தெரிவிக்க அவரை தொடாபு கொள்ள முடியாது தோற்றவனாக மெசேஜ் அனுப்பினான்.
![](https://img.wattpad.com/cover/246316545-288-k68933.jpg)