''குட் மார்னிங் எவ்ரிபடி.." என்றுவிட்டு,
''ஹனி" என குரல் கொடுத்தான்.''அவ கோயிலுக்கு போயிருக்கா. ஜுஸ் தானே இந்தாப்பா?" என பாட்டி நீட்ட வாங்கியவன்,
''கோயிலுக்கா? ஓ இன்னிக்கு பிரைடே இல்லையா? சரிதான் இனி மேடத்தை பிடித்த மாதிரி தான்." அவன் சொல்லிவிட்டு சோபாவில் பெரியவர்கள் எதிரே அமர்ந்தான். ஜுசை வைத்துவிட்டு
''டாடி நெக்ஸ்ட் வீக்ல அமெரிக்கா கிளம்பலாம் என்று இருக்கேன்.." அவன் சொல்ல, எல்லோரும் தத்தம் வேலைகளை நிறுத்திவிட்டு அவனை அதிர்வுடன் பார்த்தார்கள்.
''எல்லாப்பூஜையும் முடிஞ்சுடுத்து அல்லவா? இனி எனக்கு இங்கே என்ன வேலை? ரெண்டு மாசம் பாஸ்டா போயிடுத்து டாட்..போனதும் ஜுலியை மேரேஜ் பண்ணலாம் இல்லையா?" அவன் கேட்க பெரியவர்கள் மூச்சு நின்றுவிட்டதா? என ஒவ்வொருத்தரும் அவர்களது நெஞ்சை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றார்கள்.
''ஏம்பா தேன்மொழியை பற்றி என்ன நினைக்குறே?" பரமசிவம் உதடு திறந்தார்.
''ம்..வெரி இன்ரஸ்டிங்க் கேர்ள் தாத்தா... இன்டலிஜென்ட்..பியூட்டி ஏஞ்சல் ஸ்வீட் கேர்ள்...மை பெஸ்ட் பிரண்ட்..ஐ லைக் சோ மச்" என்றான் ஜுசை எடுத்து பருகியவாறு.
''அவ கூட இந்த ரெண்டு மாசம் ஒண்ணாக இருந்திருக்கே அவ மேலே வேற பீலீங்ஸ் ஏதாவது?" வேணுகோபால் கேட்க
''வேறு என்ன பீலீங்? ம்." யோசித்துவிட்டு,
''ம்.நத்திங்க் டாட்.." என தோள்களை குலுக்கினான்.
''ஜுலியானாவை மேரேஜ் பண்ற ஐடியா இப்போதும் இருக்கா உனக்கு?" வேணுகோபால்
''ஓ யெஸ் டாட்! அதற்காகத்தானே இங்கே வந்தோம்..நீங்க சொல்றபடி நடந்துகிட்டேன்.." என்றான் அவன்.
''அஸ்வந்த் கொஞ்சம் கூட உனக்கு ஒரு வித்தியாசம் தெரியலை?" வேணு கோபால் விடாமல் மீண்டும் கேட்டர்.
''என்ன டிவ்வரண்ட்?" அவன் புருவம் சுருங்க பார்த்துக்கேட்டான்.