என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா அத்தியாயம் 8

1.2K 28 0
                                    

'ஏய் தேனு! ஏய் புள்ள!" பின்னால் கூப்பிட்டபடி ஓடிவந்து சேர்ந்தாள் தோழிகளில் ஒருத்தி கனகவல்லி.

'ஏன் புள்ள இப்படி ஓடியாற?" மூச்சிரைக்க வந்தவளை பார்த்து கேட்டாள் தேன்மொழி.

'ஆத்துக்குத்தானே போறே? என்னய கூப்பிட தோணலையா?"

'இந்நேரம் நீ வருவேன்னு நான் என்ன ஜோசியமா பார்க்க முடியும்?" தேன்மொழி கிண்டலாக கேட்டாள்.

'இல்ல புள்ள! அக்கா குழந்தைங்க ஆடைங்க நிறைய அழுக்காக இருந்திச்சு! அவதான் வாயும், வயிறுமா இருக்காளே அதான் நான் எடுத்துட்டு வந்தேன்.."

'ம்..ஏன்டி கனகா இது எத்தனையாவது மாசம் உங்கக்காவுக்கு?"

'ஏழாவது..இந்த தடவையாவது ஆம்பளை புள்ளை பொறக்கணுமுன்னு கடா வெட்டி பொங்கல் வைக்குது ஆத்தா.." கனகா சொல்லியபடி நடந்தாள்.

'ஏனாம்? பொம்பளை புள்ளை பொறந்தா வரவேண்டாமுன்னு சொல்லிட்டாங்களா?"

'ம்...மூணாவதும் பொண்ணா போச்சு! இது நாலாவது! இதுவாவது..."

'கடவுளே! ஒவ்வொரு வருசமும் இதே பொழைப்பா போச்சு! உங்கக்கா பாவம்டி!"

'ஆமா..தேனு! அக்காவை மாமா படுத்துற பாட்டை பார்த்து எனக்கு கண்ணாலாம் என்றாலே அடி வயிறு பகீரெங்குது!"

'உனக்கு ஏண்டி இந்த பயம்?"

'இருக்காதா? இந்த தடவையும் பொண்ணா பொறந்தா மாமன் என்னைத்தான் கட்டிக்குவராம்! நானு ஆம்புள புள்ள பெத்துக்கொடுக்கணுமாம்.. மாமானும் , அவங்க ஆத்தாளும் சட்டம் பேசிட்டாங்க"

'ஓ! இப்படியெல்லாம் கூட விசயம் இருக்கா? ஆமா நீயும் பொம்பள புள்ள பெத்துக் கொடுத்தா அப்புறம்       இன்னொரு பெண்ணை கட்டிக்குவானாமா உன் மாமான்?" கோபமாக கேட்ட தேன்மொழியை பரிதாபமாக பார்த்தாள் கனகா.

இருவரும் பேசியபடி ஆற்றங்கரைக்கு வர அங்கே மற்றயை தோழிகள் அரட்டை  அடித்துக்கொண்டிருந்தனர். இவர்கள் வருவதை பார்த்து,

'என்ன ரெண்டு பேரும் ஏதோ விவரமா பேசிட்டு வர்றாப்புல?" மேகலை நீர்க்குடத்தை கழுவியபடி கேட்டாள்.

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாDove le storie prendono vita. Scoprilo ora