''வெட்கம்
என்னை தழுவியது
காதல் என்று
சொல்லிக்கொண்டு"''இங்கு பேசமுடியாது மலைக்கோவிலுக்கு போனால் என்ன" எண்ணியவளாக குழந்தைக்கு பால் கொடுத்து அதை உறங்க வைத்தவள் கணவனை அழைத்தாள்.
மனைவியின் அழைப்பை கேட்டதும் அறைக்குள் நுழைந்தவன், தேன்மொழியின் கைகளில் பூஜைத்தட்டு இருக்க அவளது அழைப்பின் நோக்கம் புரிந்தது.
''ஹனி..மலைச்சாமி உன்னை நினைவு வைச்சிருப்பாரா?"
''சாமியை கிண்டல் பண்ணக்கூடாது"
''சரி ஆத்தா! கிண்டல் பண்ணல..அது என்ன தீடிரென்று கோயில் போகும் எண்ணம்?"
''ம்.என்னோட உயிர் எனக்கு திரும்ப கிடைச்சாச்சு, என் குலதெய்வ சாமிக்கு ஒரு வேண்டுதல்' அவள் சொல்ல அஸ்வந்த் எட்டு வைத்து அவளை இழுத்து தன்னோடு அணைத்தான்.
''இத பாருங்க ! கோயிலுக்கு போகும் போது சுத்தமான மனதுடன் போகணும்!. கையை எடுங்க!" அவள் முறைப்புடன் சொல்ல
''உத்தரவு.." என்றவாறு கையை எடுத்தவன் அவள் எதிர்பாராத போது அவளது கண்களில் முத்தமிட்டான். அவள் விழிகள் திறந்து முறைக்க,
''கை தானே போடக்ககூடாதுன்னு சொன்னே.. அதான்" என அவன் விளக்கம் கொடுத்தவாறு மீண்டும் குனிய ,
''கடவுளே..!" அவள் தலையில் அடித்தவாறு அவனது மார்பில் ஒற்றை விரல் கொண்டு தடுத்து நிறுத்திவிட்டு, கெஞ்சல் பார்வை ஒன்றை எறிந்தாள்.
''ஓகே...போலாம்..போலாம்..நீ அழைத்ததும் நான் வேறு ஏதோ நினைச்சு ஓடிவந்துட்டேன்.. பட்..இட்ஸ் ஒகே! மலைச்சாமிக்கு பூஜையை முடிச்சுட்டு வா..அதுக்கு அப்புறம் இருக்கு சங்கதி.." என அவன் சொல்லியவாறு கண்ணடிக்க, தேன்மொழிக்கு முகம் சிவக்க, கணவனை வெளியே தள்ளிக்கொண்டு வந்து விட்டாள்.
வெளியே வந்தவன் காரை எடுத்தான். அடுத்த பத்தாவது நிமிடம் மலைக்கோவில் வாசலில் இறங்கினார்கள்.
''ஹனி..நான் வேணா உன்னை தூக்கிக்கொண்டு ஏறவா?" அவன் கேட்க,
''அஸ்வா..என்னை தொடாமல் நல்லபிள்ளையா பேசாமல் வாங்க" அவள் சொல்லி விட்டு நடந்தாள்.