1 முகிலன்

6.7K 76 18
                                    

1 முகிலன்

*எங்கள் கூடு* என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்த வீட்டில், அவசர அவசரமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் நற்கிள்ளி. வீட்டின் பெயர் தான் *கூடே* தவிர, வீடு என்னவோ மிகப்பெரியதாய் இருந்தது.

"மெதுவா சாப்பிடுங்க. அடைச்சிக்க போகுது" என்றபடி ஒரு தம்ளர் தண்ணீரை அவரிடம் நீட்டினார் பொன்மொழி.

"நான் சீக்கிரமா போகணும். இல்லனா இளஞ்செழியன் என்னை விட்டுட்டு  போயிடுவான்" என்றபடி இட்லியை பிட்டு சட்டினியில் முக்கி வாயில் திணித்தார் நற்கிள்ளி.

"உங்களை வர சொல்லி அவர் சொன்னாரா?"

"இல்ல"

"அப்புறம் எதுக்கு இப்படி பறக்குறீங்க?"

"அவன் என்னை கூப்பிடணும்னு அவசியமில்ல. அவனுடைய ஃபிரண்டா, அவனுக்கு என்ன வேணும்னு எனக்கு நல்லா தெரியும்"

"நான் அதைப் பத்தி பேசலங்க. ஒருவேளை, இன்னைக்கு நீங்க அவர் கூட வர்றதை அவர் விரும்பாம இருக்கலாம் இல்லயா?" என்றார் பொன்மொழி.

சாப்பிடுவதை  நிறுத்திவிட்டு, அவரை ஏறிட்ட நற்கிள்ளி,

"நீ என்ன சொல்ற?" என்றார்.

"முகிலன் உங்களை பார்க்க சங்கடப் படலாம்..."

சாப்பாட்டை பாதியில் விட்டுவிட்டு எழுந்தார் நற்கிள்ளி.

"அப்செட் ஆகாதிங்க பா. அம்மா சொல்றது சரி தான்" என்றான் அவருடைய மகன் இளங்கிள்ளி.

"ஆமாம். முகிலன் ஒண்ணும் டூருக்கு போயிட்டு வரல, ஜெயில்ல இருந்து வறான். இந்த நாலு வருஷத்துல அவன் வாழ்க்கையில எல்லாமே மாறி போயிருக்கும். அவனும் நிறையவே மாறிப் போயிருப்பான். அவன் பழைய முகிலனா இருப்பான்னு நினைக்காதீங்க" என்றார் பொன்மொழி.

சோபாவில் அமர்ந்தார் நற்கிள்ளி.

"பாவம் அந்த பிள்ளை... எவ்வளவு சந்தோஷமா இருந்தான்...! அந்த **** அவன் வாழ்க்கையை கெடுத்துட்டா" என்றார் பல்லை கடித்த படி.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now