51 மாண்புமிகு கொலைகாரன்

1.3K 69 7
                                    

51 மாண்புமிகு கொலைகாரன்

முகிலன் குளியலறையை விட்டு வெளியே வருவதை பார்த்த இலக்கியா, அதே இடத்தில் அசையாமல் நின்றாள். அவள் தயக்கத்துடன் நின்றதை பார்த்த முகிலன் ஒரு கணம் யோசித்து, பின் அவளை நோக்கி சென்றான். அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி, நகம் கடித்தபடி நின்றாள் இலக்கியா. அவள் அருகில் வந்த அவன், தன் விரலை அவள் முன் சொடுக்கினான். திட்டுக்கிட்டு அவனைப் பார்த்தாள் இலக்கியா.

"நீ சங்கடப்பட வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா, நீ சொன்னதெல்லாம் உண்மை இல்லன்னு எனக்கு தெரியும்" என்றான் தன் கைகளை கட்டிக்கொண்டு.

அதை கேட்டு திடுக்கிட்ட இலக்கியா,

"ஏன்? அதெல்லாம் ஏன் உண்மை இல்லன்னு நினைக்கிறீங்க?" என கேட்டாள் ஏமாற்றத்துடன்.

"இலக்கியா, நாலு வருஷம் ஒருத்தரை லவ் பண்றது எல்லாம் நடக்கிற விஷயமா? அதுவும் அவனுக்கே தெரியாம...?"

"என்னை நீங்க நம்பலையா?" என்று உதடு சுழித்தாள்.

இல்லை என்று தலையசைத்தான். தன் காலால் தரையை உதைத்து விட்டு, அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் முகிலன். அவன் மீது மோதிக் கொண்டு, விழி விரித்து அவனை நோக்கினாள், அவனது அந்த செயலால் திகைத்த இலக்கியா. அவளைத் தன் கரங்களால் சுற்றி வளைத்து, அவள் நகராமல் பார்த்துக் கொண்டான்.

"என்...ன செய்றீ...ங்க?"

"நான் அவ்வளவு குடுத்து வச்சவனா, இலக்கியா?" என்ற அவனது கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று அவளுக்கு புரியவில்லை.

"இந்த உலகத்திலேயே நான் தான் அதிர்ஷ்டம் கெட்டவன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... என்னுடைய வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்... என்னோட வாழ்க்கையில சந்தோஷத்துக்கு இதுக்கு பிறகு இடமே இல்லன்னு நெனச்சேன்... இப்படி கள்ளம் கபடம் இல்லாத ஒரு காதலுக்கு சொந்தக்காரனா இருக்கிற அளவுக்கு நான் தகுதியானவனா?"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now