8 தடுமாற்றம்

1.2K 62 11
                                    

8 தடுமாற்றம்

அலுவலகம் செல்ல மனமே இல்லை முகிலனுக்கு. ஆனால் அவனால் வீட்டில் இருக்க முடியாது. அவனது அம்மா சந்தேகப்படுவார். ஒருவேளை, அவனது மனம் லேசாய் தடுமாறிய விஷயம் அவருக்கு தெரிந்தால், நிச்சயம் எப்பாடுபட்டாவது நற்கிள்ளியின் மகளை அவனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார். கார் சாவியை எடுத்துக்கொண்டு தரைதளம் வந்தான். ஆதிரை வரவேற்பறையில் இல்லாததால், அவரை தேடிக் கொண்டு சமையலறைக்கு சென்றான். அவர் மதிய உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.

"உனக்கு ஏதாவது வேணுமா, சின்னு?"

"நான் ஆஃபீஸுக்கு போறேன் மா" என்றான்.

"சரி, நான் உனக்கு லன்ச்சை ஆறுமுகத்துக்கிட்ட கொடுத்துவிடுறேன்"  

சரி என்று தலையசைத்துவிட்டு, அங்கிருந்து சென்றான் முகிலன். நிம்மதி பெருமூச்சு விட்டார் ஆதிரை. அவன் இந்த திருமணத்தை நிறுத்தவில்லை. அவன் மிகப்பெரிய பிரச்சனை செய்வான் என்று அவர் எதிர்பார்த்தார். இளங்கோவுக்கு ஃபோன் செய்து அவன் அலுவலகம் வரும் விஷயத்தை அவனிடம் கூறினார். இளங்கோ எச்சரிக்கை அடைந்தான்.

முகில் ட்ரேடர்ஸ்

அலுவலகத்திற்குள் நுழைந்தான் முகிலன். அவனது முகத்தில் குழப்பம் தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. அமைதியாய் தனது அறைக்குச் சென்று தனது பணியை தொடர்ந்தான் இளங்கோ. தேவையில்லாமல் முகிலனை சீண்ட அவன் விரும்பவில்லை.

முகிலனும் ஏதாவது வேலை செய்யத்தான் நினைத்தான். ஆனால் அவனது கவனம் வேலையில் செல்லவே இல்லை. ஒரு பெண்ணின் மென்மையான குரல், அவனது காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவனுக்காக, தனக்கு பிரியமானவர்களுடன் வாதாட, முகம் தெரியாத ஒரு நபர் இருக்கிறார் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இதில் உச்சம் என்னவென்றால், அந்த பெண்ணை பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது. அதற்கும் மேல், அவள் அவனை மணந்து கொள்ள சித்தமாய் இருக்கிறாள். கண்களை மூடி தன் நாற்காலியில் சாய்ந்தான் முகிலன்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now