21 உதவி

1.2K 62 6
                                    

21 உதவி

இலக்கியா, முகிலனின் அலுவலகத்திற்கு வந்த அதே நேரம், இளஞ்செழியனும் ஆதிரையும், தாரணி மற்றும் திருமேனியுடன் தேனிசையின் இல்லம் சென்றார்கள்,  அவளையும் அவளது மாமியாரையும் திருமணத்திற்கு அழைக்க.

"சித்தி... வாட் எ சர்ப்ரைஸ்!  நீங்க எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க?" என்று தாரணியை அணைத்துக் கொண்டாள் தேனிசை.

"நேத்து வந்தோம்'

"உங்களுக்கு இப்பவாவது என்னை பாக்கணும்னு தோணுச்சே"

"நாங்க வந்தது உன் மாமியாரை பார்க்க. இன்னைக்கு காலையில நான் மாப்பிள்ளைக்கு ஃபோன் பண்ணி இருந்தேன். அவர் வெளியூரில் இருக்கிறதா சொன்னாரு" என்றார் இளஞ்செழியன்.

"ஏதாவது முக்கியமான விஷயமா பா?" என்றாள் தேனிசை, முகத்தை சுருக்கி.

"ஆமாம், நாங்க சின்னுவோட கல்யாண விஷயமா பேச வந்தோம்" என்றார் ஆதிரை.

தேனிசையின் முகம் சட்டென்று மாறியது.

"அம்மா,  என்னோட நாத்தனாரை அவனுக்கு பொண்ணு கேக்குற விஷயத்தை மறந்துடுங்கன்னு நான் தான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேன்ல?" என்றாள் எரிச்சலுடன்.

அப்பொழுது அவளது மாமியார் உள்ளிருந்து வெளியே வந்தார்.

"அடடா... என்ன திடிர்னு எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க...? நல்லா இருக்கீங்களா?" என்றார்.

"கடவுள் புண்ணியத்துல நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்"

"நீங்க எப்ப வந்தீங்க தாரணி?"

"நேத்து தான் வந்தேன்"

"தேனு, நீ போய் அவங்க எல்லாருக்கும் சாப்பிட ஏதாவது கொண்டு வா" என்றார் அவளது மாமியார்.

"அதெல்லாம் ஒன்னும் வேணாங்க. நாங்க கிளம்பணும்" என்றார் இளஞ்செழியன்.

"என்னங்க அவ்வளவு அவசரம்?"

"நிறைய வேலை இருக்குங்க. அதனால தான்"

"அப்படி என்னங்க வேலை?"

தேனிசைக்கு இருப்பு கொள்ளவில்லை. அவள் யூகம் செய்ததை அவர்கள் பேசி விடக்கூடாது என்று எண்ணினாள். அவள் ஏதும் சொல்வதற்கு முன்,

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Dove le storie prendono vita. Scoprilo ora