47 தெளிவான ஒப்புதல்
"நான் எங்க அம்மாவை நேசிக்கிறதை விட அதிகமா, உன்னை நேசிக்கிறேன். அது ஏன்னு உனக்கு தெரியுமா?"
ஏன் என்று தெரியாத இலக்கியா, அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு, சிலை போல் நின்றாள்.
"எங்க அம்மா என் மேல பிரியம் வைக்கறதுல எந்த ஆச்சரியமும் இல்ல. என் அம்மாவா இருக்கிறதால, என்னை நேசிக்குறதை தவிர அவங்களுக்கு வேற எந்த சாய்ஸும் இல்ல. ஆனா உனக்கு இருந்தது...! ஒரு கொலைகாரனை தவிர்க்க உனக்கு சாய்ஸ் இருந்தது. ஒரு நார்மல் மனுஷனை தேர்ந்தெடுத்து, நிம்மதியான வாழ்க்கையை உன்னால வாழ்ந்திருக்க முடியும். ஆனாலும் நீ என்னை தான் தேர்ந்தெடுத்த...! உன்னை போய் நான் எப்படி அப்படியெல்லாம் பேசுவேன்?" என்றான் வேதனையான குரலில்.
அவ்வளவு தான், அதற்கு மேல் யோசிக்க எதுவும் இல்லாததால், அவன் கழுத்தை இறுக்கமாய் கட்டிக் கொண்டு, அழுதாள் இலக்கியா. ஆனால், அது மகிழ்ச்சியில் வெளியான கண்ணீர். முகிலன் அவளைத் தன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டு, தன் வார்த்தைக்கு உயிரூட்டினான்.
"எனக்கு நீ தான் இலக்கியா எல்லாமே. உன்னை நான் ரொம்ப காதலிக்கிறேன். நான் அதை உன்கிட்ட சொன்னது இல்ல. ஆனா அதுக்காக நான் அதை உன்கிட்ட சொல்ல பிரிய படலன்னு அர்த்தமில்ல. காதலுக்கு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கலாம். ஆனா என்னை பொறுத்த வரைக்கும் காதல்னா அது இலக்கியா! எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது...! என் நம்பிக்கையெல்லாம் உன் மேல மட்டும் தான் இலக்கியா"
தன் மனதில் தேக்கி வைத்திருந்த தன் மனைவிக்கான காதலை வெளியிட்டதன் மூலம், இறுதியாய், ஆனால், உறுதியாய் தான் பதுங்கி இருந்த கூட்டை உடைத்து கொண்டு வெளியே வந்தான் முகிலன்...!
அவனது ஒப்புதலை கேட்ட பிறகு, அதுவும் இவ்வளவு தெள்ளத் தெளிவான ஒப்புதலை கேட்ட பிறகு, தான் கட்டி இருந்த அவன் கழுத்தை விட்டு, அவனை பார்த்து மகிழ்ச்சி கண்ணீருடன் புன்னகை புரிந்தாள் இலக்கியா.
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...