32 இலக்கியாவுடன்...
முகிலனை தன்னுடன் இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள் இலக்கியா. அவளது அறையில் தன் கண்களை ஓடவிட்டு நின்றான் அவன். அவனது கண்கள், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த இலக்கியாவின் புகைப்படத்தில் நிலைத்து நின்றது. அதில் அவள் அழகாய் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அவளது புன்னகை எப்பொழுதுமே ஒரு மாஸ்டர் பீஸ் என்று நினைத்தான் அவன்.
"சின்னையா, உட்காருங்க" என்று தன் கட்டிலை சுட்டிக்காட்டினாள்.
அவளை நோக்கி அதிர்ச்சியுடன் திரும்பிய அவன்,
"நீ உண்மையிலேயே என்னை சின்னையான்னு கூப்பிடுறியா?" என்றான்.
"ஆமாம்" என்று தன் தோலை லேசாய் குளிக்கினாள் அவள்.
"தேவையில்ல.. நீ என்னை எப்பவும் போல பேர் சொல்லியே கூப்பிடு. நீ என் அக்காவோட பேச்சை பெருசா எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்ல. அவங்களை மறந்துடு" என்றான்.
"நான் அவங்களை மறந்தாலும், அவங்க என்னை மறக்க மாட்டாங்க" என்று சிரித்தாள் அவள்.
"அவங்க எப்பவுமே அப்படித்தான். மத்தவங்க கிட்ட குறை கண்டுபிடிக்கிறதே அவங்க வேலை. அவங்களை சீரியஸா எடுத்துக்காதே" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
"அவங்களை பெருசா எடுத்துக்காம எப்படி இருக்க முடியும்? ஏற்கனவே என்கிட்ட அவங்க குறை கண்டுபிடிச்சுகிட்டே இருக்காங்க. நீங்க எல்லாரும் என்னை சப்போர்ட் பண்றதை பார்த்தா, அவர்களுக்கு இன்னும் என் மேல கோபம் தானே வரும்?"
"நாங்க உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம்... ஏன்னா, யார் மேல தப்பு இருக்குன்னு எங்களுக்கு தெரியும்"
"இருக்கலாம்... ஆனா அவங்க உங்க மேல கோவப்பட மாட்டாங்க, என் மேல தான் கோபப்படுவாங்க"
"ஆனா..."
"தயவு செய்து புரிஞ்சுக்கங்க, சின்னையா"
"அவங்க ஒன்னும் நம்ம வீட்ல தங்கறது இல்லையே...? எப்பவாவது தானே வராங்க? அப்படின்னா நம்ம தனியா இருக்கும் போது நீ என்னை பேர் சொல்லி கூப்பிடலாமே?"
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...