61 கட்டம் கட்டப்பட்ட தேனிசை

1K 55 4
                                    


61 கட்டம் கட்டப்பட்ட தேனிசை

தேனிசைத் தந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அழுதபடி இருந்தார் ஆதிரை. எவ்வளவு தான் அவருக்கு சமாதானம் சொல்லப்பட்டாலும், அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன் மகள் அளித்த அந்த மிகப்பெரிய ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும் அவர் தாய் அல்லவா!

"இதுக்கு அப்புறம் நான் அவள் முகத்திலேயே முழிக்க மாட்டேன்" என்றார் கண்ணீரை துடைத்த படி.

"சரி, நீ  அவளை பார்க்க வேண்டாம்... விடு" என்றார் இளஞ்செழியன்.

"அவ இங்க வந்தா கூட நீங்க அவளை என்னை பாக்க விடக்கூடாது"

"நிச்சயமா உன்னை பாக்க அவளை விட மாட்டேன்"

"அம்மா, ப்ளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க" என்றான் முகிலன்.

"இல்ல சின்னு, நான் இனிமே அவளை நிச்சயம் பார்க்கவே மாட்டேன்"

"சரி மா, நாங்க அவங்களை இங்க வர விட மாட்டோம். போதுமா?"

அவருக்கு ஒரு தட்டில் சாப்பாடு போட்டு எடுத்து வந்தாள் இலக்கியா.

"அம்மா, நீங்க எதுவுமே சாப்பிடாம இருக்கீங்க. வாங்க... கொஞ்சம் சாப்பிடுங்க"

"இல்லடா அம்மா... எனக்கு வேண்டாம்"

"அம்மா, தயவு செய்து உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க. எங்களுக்கு நீங்க வேண்டாமா?"

அவள் கையில் இருந்த அந்த தட்டை வாங்கி, ஒரு தேக்கரண்டி சாப்பாடை எடுத்து,

"ஆதி, இந்தா, இதை சாப்பிடு" என்றார் இளஞ்செழியன்.

அவரிடம் இருந்த தட்டை வாங்கி சாப்பிட்டார் ஆதிரை. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, இலக்கியாவை பார்த்தார் அவர்.

"ஏதாவது வேணுமா அம்மா? தண்ணி கொடுக்கவா?" என்று அங்கிருந்த தண்ணீர் சொம்பை கையில் எடுத்தாள் இலக்கியா.

"நான் சாப்பிட்டேனா இல்லையான்னு ஒரு தடவை கூட தேனிசை கேட்டதே இல்ல தெரியுமா...?" என்றார்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now