59 ஆட்டம் முடிந்தது

1.1K 60 6
                                    

59 ஆட்டம் முடிந்தது

தன் தங்கையை அணைத்துக் கொண்ட இளங்கிள்ளி, முகிலனை பார்த்து இதமாய் புன்னகைத்தான், அவனை வரவேற்கும் தொணியில். இளங்கிள்ளியிடமிருந்து அப்படி ஒரு  வரவேற்பை எதிர்பார்க்கா விட்டாலும், தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டான், முகிலன்.

"ஒரு வழியா எங்க ஞாபகம் உனக்கு வந்துடுச்சு போல இருக்கு" என்றான் இளங்கிள்ளி.

அவனது அணைப்பிலிருந்து விடுபட்ட இலக்கியா, அவன் கையில் ஒரு அடி போட்டு,

"நான் எப்பவுமே உங்களைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஆமாம் தானே முகி?" என்றாள்.

ஆமாம் என்று புன்னகையுடன் தலையசைத்தான் முகிலன். முகிலனை தன் தங்கை பெயர் சொல்லி அழைத்ததை கேட்ட இளங்கிள்ளி, வியப்படைந்தான். அது அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்ததை அவனுக்கு உணர்த்தியது.

"நீ எப்பவுமே எங்களைத்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்னா, ஏன் எங்களுக்கு ஃபோனும் பண்ணல? இங்கேயும் ஒரு தடவை கூட வரவே இல்ல?" என்றான் இளங்கிள்ளி.

இலக்கியா திகைத்து நிற்க, உள்ளூர புன்னகைத்துக் கொண்டான் முகிலன்.

"நான் என் மாமியார் வீட்டில் ரொம்ப பிசியா இருந்தேன். உனக்கு சந்தேகம் இருந்தா, முகிலனை கேட்டுப்பார்" என்றாள்.

"எதுக்காக அவரை பேர் சொல்லி கூப்பிடுற? நம்ம குடும்பத்தை பத்தி உங்க மாமியார் என்ன நினைப்பாங்க?" என்று கடிந்து கொண்டான் அவன்.

"அவங்க சூப்பர் கூல் மாமியார். அவங்க என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. என்னை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்"

"உன் வீட்டுக்காரருக்கு? நீ அவரை மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிடுறது அவருக்கு ஓகேவா?"

"இலக்கியா என்னை பேர் சொல்லி கூப்பிடுறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஏன்னா, அவளுக்கு என் மேல மரியாதை இருக்குன்னு எனக்கு தெரியும்" என்று அந்தக் கேள்விக்கு பதிலளித்தான் முகிலன்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now