28 திருமணம்
முகூர்த்தத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, தன் குடும்பத்தாருடன் மண்டபத்திற்கு வந்தாள் இலக்கியா. முகிலன் குடும்பத்தினர் ஏற்கனவே அங்கு வந்துவிட்டிருந்தார்கள். தனக்கு வரப்போகும் மருமகளை, ஆலம் சுற்றி வரவேற்றார் ஆதிரை. அவரைப் பார்த்து இலக்கியா புன்னகைத்த போது, அந்த மண்டபத்தின் ஒரு மூலையில் நின்றிருந்த ஒருவன் தன் வயிற்றில் சில பட்டாம்பூச்சிகள் பறப்பதை உணர்ந்தான். வார்த்தைகளால் எளிதில் வர்ணித்து விட முடியாத அளவிற்கு அவள் அழகாய் இருந்தாள். இன்றிலிருந்து, அவள் அவனுடனே இருக்கப் போகிறாள். அவன் எப்படி அவளை சமாளிக்க போகிறான் என்று தான் அவனுக்கு புரியவில்லை.
மணமகள் அறையை நோக்கி சென்றாள் இலக்கியா. அந்த அறைக்குள் அவள் நுழையும் முன், அவளை தடுத்து நிறுத்தினான் இளங்கோ. அதை பார்த்த முகிலன் முகம் சுருக்கினான். இளங்கோவை பார்த்து துணுக்குற்ற இலக்கியா, சற்று தூரமாய் அவனுடன் வந்தாள்.
"அந்த ஃபோட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது இலக்கியா?" என்றான் சிரித்த முகத்தோட, மற்றவர் யாரும் தங்களை சந்தேகப்பட வேண்டாம் என்று.
அவனைப் போலவே சிரித்தபடி, அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தாள், ஏதோ அவன் அவளிடம் வேடிக்கையாய் பேசியது போல.
"அதை யாரோ அம்மாவுக்கு கொரியர் பண்ணி இருந்தாங்க"
தன் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை காட்டிக் கொள்ளாமல் இருக்க சிரமப்பட்டான் இளங்கோ.
"அந்த போட்டோஸை அம்மா பாத்துட்டாங்களா?" என்றான்.
"இல்ல. என்னோட கசின் தான் அந்த கொரியரை வாங்குனா. அப்போ அம்மா இல்ல அப்படிங்கிறதால, அவ அதை என்கிட்ட கொண்டு வந்து கொடுத்துட்டா"
"தேங்க் காட்"
"ஆமாம். நான் கடவுளுக்கு தான் நன்றி சொன்னேன். ஏன்னா, அந்த போட்டோஸை அம்மா பார்த்திருந்தா, அவ்வளவு ஈஸியா எடுத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டாங்க"
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...