44 இனிமையான வார்த்தைகள்

1.2K 51 8
                                    

44 இனிமையான வார்த்தைகள்

ஆதிரைக்கு முகிலன் மீது கோபமாய் வந்தது. அவன் ஏன் இலக்கியாவை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறான்? அவளுக்கு என்ன வேண்டும் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறான்? அவனிடம் சண்டை போட வேண்டும் என்று காத்திருந்தார் அவர். இலக்கியா எவ்வளவு இனிமையான பெண்! அவளை விட ஒரு நல்ல மனைவி முகிலனுக்கு கிடைத்து விடுவாளா? ஆவளால் இயன்றவரை அந்த உறவுக்கு உயிரூட்ட அவள் முனைந்து கொண்டிருக்கிறாள். ஆனால் முகிலனோ, அதைப் பற்றி எல்லாம் சிறிதும் யோசிப்பதே இல்லை. அவளை அவனும் சமாதானப்படுத்த மாட்டான், அவள் அம்மா வீட்டிற்கும் அனுப்ப மாட்டான். என்ன கணவன் இவன்! என்று பொருமிக் கொண்டிருந்த அவர், அவன் வீட்டிற்குள் நுழைவதை கண்டார்.

"அம்மா, இலக்கியா எப்படி இருக்கா?"

"நீ செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல" என்று அவன் மீது பாய்ந்தார்.

"நான் என்ன செஞ்சேன்?"

"எதுக்காக அவங்க அம்மா வீட்டுக்கு போக அவளை விட மாட்டேங்குற? ஒரு பொண்ணுக்கு அவங்க அம்மாவோட சப்போர்ட் அவசியம்னு உனக்கு தெரியலையா?"

"எல்லாத்துக்கும் அவங்க அம்மாகிட்ட ஓடி போறதுக்கு அவ ஒன்னும் குழந்தை இல்ல. இது தான் அவளோட வீடு. இங்க இருந்து தான் அவ எல்லா பிரச்சனைகளையும் ஹேண்டில் பண்ணனும். அதுக்கு அவ தன்னை பழகிக்கணும். எல்லாத்துக்கும் அவங்க அம்மா வீட்டுக்கு அவளை அனுப்பணும்ங்கிறது நல்ல ஐடியாவா எனக்கு தெரியல. நான் அவளை அனுப்புறதா இல்ல. அவ்வளவு தான்..."

"ஏன்? உன்கிட்ட பர்மிஷன் கேட்காமலேயே அவ அவங்க அம்மா வீட்டுக்கு போனா நீ என்ன செய்வ?"

பல்லை கடித்துக்கொண்டு அவரைப் பார்த்து முறைத்த அவன், பதில் ஏதும் கூறாமல் தன் அறைக்கு விரைந்தான்.

அவனது செயலால் மிகுந்த கோபம் அடைந்தார் ஆதிரை.

முகிலன் தங்கள் அறைக்குள் நுழைந்தபோது, கட்டிலில் அமர்ந்து கொண்டு தரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் இலக்கியா. அவள் இன்னும் விபத்துக்கான பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. உண்மையிலேயே அவள் தன் அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறாளா?  அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவன் அவளுக்கு அருகில் செல்லும் வரை, அவன் அங்கு வந்ததையே அவள் உணரவில்லை. தன் இமைகளை உயர்த்தி அவனை பார்த்தாள் இலக்கியா.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Où les histoires vivent. Découvrez maintenant