25 மருதாணியில் பெயர்

1.1K 59 6
                                    

25 மருதாணியில் பெயர்

மறுநாள்

வழக்கம் போல் அலுவலகம் சென்றான் முகிலன். தன் அம்மாவுடனும், உறவுக்கார பெண்களுடனும், மருதாணி வரைந்து கொள்ள முகிலன் இல்லம் வந்தாள் இலக்கியா.

"வாங்க, எல்லாரும் வாங்க" என்று கை கூப்பி வந்தவர்களை வரவேற்றார் ஆதிரை.

"வாம்மா மருமகளே" என்றார் தாரணி, இலக்கியாவை பார்த்து. அவள் சிரித்தபடி உள்ளச் சென்றாள்.

"வாங்க, பியூட்டிஷியன் எல்லாம் வந்துட்டாங்க. உங்களுக்காக தான் காத்துக்கிட்டு இருக்காங்க" என்று அவர்களை அழைத்துச் சென்றார் ஆதிரை.

அவரை பின்தொடர்ந்து சென்றார்கள் இலக்கியாவும், பொன்மொழியும். ஒரு அழகு கலை நிபுணரின் முன்னாள் அவர்களை அமர வைத்த தாரணி,

"அவளுக்கு நல்ல டிசைன்ஸ் காட்டுங்க. அவளுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை போட்டு விடுங்க" என்றார்.

சரி என்று தலையசைத்த அந்த அழகு கலை நிபுணர், அவளிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தார். அதை வாங்கி பக்கத்தில் வைத்துக் கொண்ட இலக்கியா,

"எனக்கு இந்த டிசைனை போட்டு விடுங்க" என்று அவரிடம் ஒரு காகிதத்தை நீட்டினாள்.

அதை பார்த்துவிட்டு இலக்கியவை பார்த்த அவர்,

"நிச்சயமா தான் சொல்றீங்களா?" என்றார்.

அவள் ஆம் என்று தலையசைக்க, பெருமூச்சுவிட்டு, அதை அவளது கையில் வரைய தொடங்கினார் அந்த அழகு கலை நிபுணர்.

அப்பொழுது தனது நாத்தனாருடன் அங்கு வந்தாள் தேனிசை. இலக்கியாவிடம் வந்த தாரணி அவளுடன் அமர்ந்து கொண்டார்.

"முடிஞ்சிடுச்சா?"

"முடிஞ்சிடுச்சு அத்தை" என்று தன் கைகளை மறைத்துக்கொண்டு கூறினாள் இலக்கியா

"என்ன டிசைன் செலக்ட் பண்ண? காமி பார்க்கலாம்..."

"அது... வந்து... நான் உங்களுக்கு அப்புறமா காட்டுறேனே..."

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now