58 காரணம்

1.2K 59 6
                                    

58 காரணம்

"இருங்க நான் உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டுவரேன்" என்று சமையல் அறைக்கு சென்றாள் இலக்கியா.

அப்பொழுது முகிலனுக்கு இளங்கோவிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்ற முகிலன்,

"சொல்லு இளங்கோ" என்றான்.

"தேனிசைக்கு தொடர்ச்சியா ஒரு நம்பர்ல இருந்து ஃபோன் வந்துகிட்டே இருக்கு. ஆனா அவங்க அந்த காலை அட்டன் பண்ணல"

"யாராவது அவங்க ஃபிரண்டா இருப்பாங்க..."

"எனக்கு அப்படி தோணல. ஏன்னா, அவங்க ஃபிரண்ட்ஸ் பேசும் போது, அந்த காலை அட்டென்ட் பண்ணி, அப்புறமா பேசறேன்னு சொல்லி காலை கட் பண்ணாங்க"

"ஓ..."

"இன்னும் சில கால்சை எல்லாம் கூட அவங்க அட்டென்ட் பண்ணாங்க. ஆனா, அந்த ஒரு நம்பரை மட்டும் அவங்க அட்டென்ட் பண்ணவே இல்ல"

"அது யாருடைய நம்பர்?"

"நாங்க செக் பண்ணிட்டோம். அது யாரோ சௌதாம்பிகாவோட நம்பர்"

"சௌதாம்பிகாவா?" என்றபடி ஆழ்ந்து யோசித்தான் முகிலன்.

"நான் இதுக்கு முன்னாடி அந்த பெயரை கேட்டதே இல்ல"

"ஆனா, நான் கேட்டிருக்கேன்"

"நெஜமாவா?"

"ஆமாம்"

"எங்க?"

"அது தான் எனக்கு ஞாபகம் வர மாட்டேங்குது"

"தயவுசெய்து, எங்கே கேட்டேன்னு யோசிச்சு சொல்லு, முகிலா"

"சரி. நீ முதல்ல அந்த நம்பரோட அட்ரஸை கண்டுபிடி"

"கண்டுபிடிச்சிட்டோம். ஆனா, சௌதாம்பிகா அந்த அட்ரஸ்ல இல்ல"

"ஓ..."

"ஆனாலும் அவங்களைப் பத்தி நான் என்கொயர் பண்ண சொல்லி இருக்கேன்"

"நல்லது"

"அது யாருன்னு ஞாபகம் வந்தா சொல்லு"

"நிச்சயம் சொல்றேன்" என்று அழைப்பை துண்டித்தான் முகிலன்.

அந்தப் பெயரை அவன் இதற்கு முன்பு எங்கோ கேட்டிருக்கிறான்... வெகு நாட்களுக்கு முன்பு... அவனது முதல் திருமணத்திற்கு முன்பாக கூட இருக்கலாம்... எங்கே கேட்டான்...? முகிலன் தனது மூளையை கசக்கினான். சாதாரணமாய் அனைவரும் வைத்து விடக்கூடிய பெயர் அல்ல அது. அதே நேரம், அந்த பெயர் அவனுக்கு தெரியாததும் அல்ல. கண்களை மூடி தன் நினைவுக்கு கொண்டு வர முயன்றான்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now