16 சரி...

1.1K 61 7
                                    


16 சரி...

ஆதிரைக்கு ஃபோன் செய்தாள் இலக்கியா. அவளது எண் தன் கைபேசியில் ஒளிர்ந்ததை பார்த்த ஆதிரையின் முகம், அதைவிட பிரகாசமாய் ஒளிர்ந்தது.

"இலா... எப்படிடா இருக்க?"

"நான் நல்லா இருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க?"

பெருமூச்சு விட்ட ஆதிரை,

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல"

"நான் சொன்னதை நீங்க ட்ரை பண்ணி பாத்தீங்களா, இல்லையா?"

"செஞ்சேனே..."

"அது அவருக்கு தெரியுமா?"

"நான் அவனுக்கு முன்னாடி தானே அதை செஞ்சேன்"

"அவர் அதுக்கு எதுவும் சொல்லலையா?"

"இல்லடா. அவன் எதுவுமே சொல்லல"

"அப்படின்னா, அவர் கல்யாணத்துக்கு முடியாதுன்னு சொல்ல மாட்டாரு"

"அப்படியா சொல்ற?"

"ஆமாம். கல்யாண தேதியை முடிவு பண்ணிட்டதா அவர் கிட்ட சொல்லுங்க"

"அவன் கோபப்பட்டா என்ன செய்றது?"

"அப்படின்னா நம்ம கல்யாணத்தை நிறுத்திடலாம்"

தன்னுடைய பொலிவை இழந்தார் ஆதிரை.  கல்யாணத்தை நிறுத்துவதற்கு அவர் தயாராக இல்லை.

"அம்மா, நீங்க லைன்ல தானே இருக்கீங்க?"

"ஆமாம்"

"நான் சொன்னதை செய்யுங்க. நல்லதே நடக்கும்"

"சரி  டா..."

"பை அம்மா. நான் உங்க காலுக்காக காத்திருப்பேன். அவரோட முடிவு என்னன்னு தெரிஞ்சுக்க" என்றாள்

"நிச்சயமா கால் பண்றேன்"

அவர்கள் அழைப்பை துண்டித்தார்கள். தான் ஏற்கனவே முகிலனை சந்தித்து பேசிய விஷயத்தை ஆதிரையிடம் சொல்ல இலக்கியா நினைக்கவில்லை. முகுந்தனின் நிபந்தனை தங்களுக்குள்ளேயே ரகசியமாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.  ஏனென்றால், ஒரு வேளை திருமணம் நடந்து விட்டால், அதற்குப் பிறகு ஆதிரை அவர்கள் இருவரையும் உற்று கவனிப்பதை அவள் தவிர்க்க நினைத்தாள். அது நிச்சயம் முகிலனை சங்கடப்படுத்தும் அல்லவா?

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now