43 முகிலனின் காதல்
மனம் நிறைய இலக்கியாவை பற்றிய எண்ணங்களை சுமந்து கொண்டு, காரை ஒட்டி சென்றான் முகிலன். ஆரம்பத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்தையும் யோசித்தபடி சென்றான் அவன். அவள் எதற்கும் கவலைப்படாத, விளையாட்டுத்தனமான பெண் என்று எண்ணிக் கொண்டிருந்தான் அவன். ஆனால் இன்று, அவள் மிகுந்த மனஅழுத்தத்துடன் காணப்பட்டாள். அழுது சிவந்த அவளது முகம், அவள் ஒரு அப்பாவி பெண் என்பதை காட்டியது. அவள் அவனை மிகவும் நேசிக்கிறாள் என்பதில் அவனுக்கு சிறிதும் சந்தேகம் இல்லை...! அவனும் கூட அவளை நேசிக்கிறான் தான்! அவள் இவ்வளவு மாசற்றவளாக இருந்தால், அவன் ஏன் அவளை காதலிக்க மாட்டான்? தன் மனதை அவளிடம் எப்படி திறந்து காட்டுவது என்பது தான் அவனுக்கு புரியவில்லை. அவனை சொல்லி குற்றமில்லை, அவன் அப்படித்தான். ஆனால் ஒரு உறவை வளர்க்கவும், பலப்படுத்தவும் மனதில் இருக்கும் எண்ணங்களை மூடி வைத்தால் ஆகாது. அவனுக்கும் அது தெரியும். அவனது சமீப கால நடவடிக்கை குறித்து, அவனுக்கே கூட ஆச்சரியமாய் இருந்தது. அவனை மீறி அவன் பேசுவதும் சிரிப்பதும் அவனுக்கு வியப்பளித்தது. அது அவனே திட்டமிடாத ஒன்று. வரப்போகும் நாட்களில், இப்படி திட்டமிடாத ஒரு சந்தர்ப்பத்தில், அவன் தனது மனதை அவளிடம் திறந்து காட்டவும் வாய்ப்பிருக்கிறது...!
...........
சென்னையின் ஏதோ ஒரு இடத்தில்...!
அந்த லாரி ஓட்டுநன் வெண்ணிலாவின் முன் நின்றிருந்தான். அவனை ஓங்கி அறைந்து தனது எரிச்சலை வெளியிட்டாள் அவள்.
"இந்த சின்ன விஷயத்தை கூட உன்னால ஒழுங்கா செய்ய முடியாதா? ரெண்டு பேரையும் கொல்ல முடியலன்னா, அட்லீஸ்ட் ஒருத்தரயாவது கொன்னிருக்கலாம் இல்ல...? குறைஞ்சபட்சம், ரெண்டு பேர்ல ஒருத்தர் காலையாவது ஒடச்சி இருக்கணும்..." பித்து பிடித்தவள் போல் கத்தினாள் அவள்.
"என்னோட குறி ரொம்ப துல்லியமா இருந்தது. ஆனா, நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மாதிரி, அந்த பொண்ணு அவனைப் பிடிச்சு தள்ளி, அவனை காப்பாத்திட்டா"
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...