55 அவள் யார்?

1.3K 58 8
                                    

55 அவள் யார்?

"சீதாராமனை உங்க வீட்டுக்கு அனுப்புன பொம்பளையோட அவன் பேசினான். அவ யாருன்னு நாங்க கண்டுபிடிச்சிட்டோம்" என்றான் இளங்கோ.

"யார் அவ?" என்றான் முகிலன்.

"உங்க அக்கா தேனிசை" என்றான் இளங்கோ, அவனுக்கு அதிர்ச்சி அளித்து.

"என்ன சொல்ற?"

"ஆமாம், முகிலா"

"ஏதாவது ஆதாரம் இருக்கா?" என்றான் முகிலன். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், அவளை தவறானவள் என்று நிரூபிக்க முடியாது என்பதால்.

"இருக்கு. அவங்க பேசினதை ரெகார்டிங் பண்ணியிருக்கோம்"

"அதை எனக்கு அனுப்பு"

"ஏற்கனவே அனுப்பிட்டேன்"

"சரி, அவங்க ஃபோனை தொடர்ந்து ட்ராக் பண்ணிக்கிட்டு இருங்க"

"நீ உண்மையை எல்லார்கிட்டயும் சொல்ல போறது இல்லையா?"

"நிச்சயமா சொல்லுவேன். ஆனா அவங்க ஏன் இப்படி செஞ்சாங்கன்னு காரணத்தை நான் தெரிஞ்சிக்க நினைக்கிறேன். அதுக்கான காரணத்தை நிச்சயம் அவங்க சீதாராமன் கிட்ட சொல்லி இருக்க மாட்டாங்க"

"ஆமாம். நீ அவனை அடிச்சதாகவும், அவன் சொன்ன எதையும் நீ நம்பலன்னும் மட்டும் தான் சொன்னான்"

"அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?"

"அவங்க உன்னை கவனிச்சுக்கிறேன்னு சொல்லிட்டாங்க"

"அவங்க என்னை கவனிச்சிக்க போறாங்களாமா?" என்றான் கோபமாய் முகிலன்.

"அவங்க அப்படித்தான் சொன்னாங்க" என்றான் இளங்கோ.

"அவங்களை நான் பார்த்துக்கிறேன்" என்றான் முகிலன் பல்லை கடித்த படி.

அழைப்பை துண்டித்த அவன், இலக்கியாவை தேடியபடி தரைதளம் வந்தான். அவனுக்கு தெரியும், தேனிசை அவனை பார்த்துக்கொள்கிறேன் என்றால், அவள் பார்த்துக் கொள்ள இருப்பது அவனை அல்ல, இலக்கியவை தான் என்று. தேனிசைக்கு தெரியும் யாரை, எங்கே, எப்படி அடிக்க வேண்டும் என்று. இலக்கியாவை உணர்ச்சிபூர்வமாய் அவள் தாக்க முயல்வாள். தற்போது தான், தங்களுக்கு இடையில் இருந்த அனைத்து பிரச்சனைகளையும் முடித்துக் கொண்டு, ஒரு நிம்மதியான வாழ்க்கையை அவன் இலக்கியாவுடன் துவங்கினான். இப்பொழுது தேனிசை ஒரு தலைவலியாய் முளைத்திருக்கிறாள்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now