45 இக்கட்டில் முகிலன்
இலக்கியாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. சிறிது நேரம் வரை அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் கேட்டது முகிலனின் குரல் தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆனால் தன்னைப் பற்றி அவ்வளவு நாகரிகமற்ற வார்த்தையை நிச்சயம் அவன் பயன்படுத்தியிருக்க மாட்டான். விபத்துக்கு பிறகு எவ்வளவு இனிமையாய் அவளை அவன் சமாதானப்படுத்த முயன்றான்! அவள் என்ன செய்த போதும் அவன் ஒரு முறை கூட அவள் மீது எரிந்து விழுந்ததே இல்லையே. இதில் ஏதோ சூது இருக்கிறது. யாரோ அவர்களுக்கிடையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி முகிலனிடம் கூறுவது சரியாக இருக்குமா? ஒருவேளை அவனுக்கு கோபம் வந்து, ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது? முகிலனிடம் கூறுவதற்கு பதிலாக இதைப் பற்றி இளங்கோவிடம் பேசுவது தான் சரியாக இருக்கும். அவன் இதை புத்திசாலித்தனமாய் கையாளுவான்.
கைபேசியை கையில் வைத்தபடி அவள் தன் கண்களை துடைத்த போது, அவள் கை பட்டு மீண்டும் அந்த ஒலிப்பதிவு ஒலித்தது. அந்த ஒளிப்பதிவை அவள் நம்பவில்லை என்றாலும், அதை மறுபடியும் கேட்டபோது அவளால் அதை தாங்க முடியவில்லை. அதை நிறுத்திவிட்டு பின்னால் திரும்பினாள். அவளது முகம் பேயறைந்தது போல் ஆனது, அங்கு ஆதிரை அதிர்ச்சியான முகத்துடன் நின்றிருந்ததை பார்த்து. சட்டென்று அவருக்கு எதிர்ப்புறம் திரும்பி தன் கண்களை துடைத்துக் கொண்டாள் இலக்கியா.
தன் கையில் இருந்த தேனீர் குவளைகளை மேசையின் மீது வைத்துவிட்டு, இலக்கியாவின் தோளை பற்றி திருப்பி, தன்னை பார்க்கச் செய்தார் ஆதிரை. அவள் ஒரு செயற்கை புன்னகை உதிர்த்தாள்.
"என்ன இது இலக்கியா?" என்ற அவரது கேள்வி இலக்கியாவை திடுக்கிட செய்தது. அவர் அதை கேட்டு விட்டாரோ...!
"ஒன்னும் இல்லம்மா..." சமாளிக்க முயன்றாள்.
அவரது அடுத்த வாசகம் அவளை அதிர்ச்சி அடையச் செய்தது,
"நான் அதைக் கேட்டுட்டேன்..."
"அம்மா அவர் நிச்சயமா அப்படி பேசி இருக்க மாட்டாரு. அவரை நம்புங்க. அவருக்கு என் மேல நல்ல மரியாதை இருக்கு. எனக்கு அவரைப் பத்தி தெரியும் மா" என்ற போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது.
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...