41 வெகு இயல்பாய் முகிலன்...
"சின்னு, இன்னைக்கி நீ வீட்ல இருக்கிறதால, இன்னைக்கு சாயங்காலமே இலக்கியாவை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போயிட்டு வந்துடு" என்றார் ஆதிரை.
அதை கேட்ட இலக்கியா ஒன்றும் புரியாமல் முகம் சுருக்கினாள்.
"உனக்கு தலையில அடிபட்டு இருக்கிறதால, உனக்கு ஸ்கேனிங் பண்ணனும்னு, சின்னு டாக்டர் கிட்ட கேட்டான்" என்றார் ஆதிரை அவள் முகத்தை பார்த்து அவள் மனதில் இருப்பதை உணர்ந்து கொண்டு.
"எனக்கு தலையில அடிபட்டு ரத்தம் வந்துடிச்சி இல்லம்மா... அதனால ஒன்னும் பிரச்சனை இருக்காது"
"டாக்டரும் அதைத்தான் சொன்னாங்க. ஆனா, சின்னு ஸ்கேன் பண்ணி பாத்துடுறது நல்லதுன்னு நினைக்கிறான்"
ஒருவேளை, அது மட்டும் முதல் நாளாக இருந்திருந்தால், அவன் அப்படி கூறியதற்காக, அவனைப் பார்த்து கிண்டலாய் சிரித்திருப்பாள் இலக்கியா. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது. அதனால் அமைதி காத்தாள்.
"சாப்பிடுறதுக்கு கீழே வரியா? இல்ல, நான் உனக்கு இங்க கொண்டு வரவா?" என்றார் ஆதிரை.
"வேண்டாம் மா. நான் கீழே வந்து சாப்பிடுறேன்"
"உன்னால நடந்து வர முடியுமா?"
"வர முடியும் மா"
"உன்னால வர முடியலன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல. சின்னு உன்னை தூக்கிக்கிட்டு வருவான்" என்றார் கிண்டலாய்.
"என்னால நடக்க முடியும் மா" என்றாள் தலை குனிந்த படி.
"சரி, அரை மணி நேரம் கழிச்சி கீழ வாங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் ஆதிரை.
"உன்னை தூக்கிக்கிட்டு போறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல இலக்கியா!" என்ற எதிர்பாராத வார்த்தைகளை, எதிர்பாராத மனிதனிடமிருந்து கேட்டு திடுக்கிட்டாள் இலக்கியா. அதைக் கூறிய முகிலனை அவள் திரும்பிப் பார்க்க, அவன் சிரித்தபடி தன் மடிக்கணினியில் பணி செய்து கொண்டிருந்தான். அது அவளுக்குள் கலவரத்தை உண்டு பண்ணியது.
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...