18 நிச்சயம்

1.2K 62 8
                                    

18 நிச்சயம்

இலக்கியாவின் புன்னகையை பார்த்த முகிலன் மெய் மறந்து போனான். அவளது புன்னகையில் எந்த களங்கமும் இல்லை. இன்னமும் கூட அவனால் நம்ப முடியவில்லை, தன்னை பற்றி அனைத்தும் தெரிந்த பிறகும் ஒரு பெண் அவனை திருமணம் செய்து கொள்ள சித்தமாய் இருக்கிறாள் என்று. இதில் விசித்திரம் என்னவென்றால், அவள் அவனைப் பற்றி தெரிந்து கொண்டதெல்லாம் அவளது தந்தையிடம் இருந்து. இன்னும் சில நாட்களில் அவள் அவனுக்கு மனைவியாக போகிறாள். அவளைப் பார்த்தபடி இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான் முகிலன். அவனுக்கு தூக்கி வாரி போட்டது, தன் கைபேசியை தன் பக்கம் திருப்பி, இளங்கோ பல்லைக்காட்டி இளித்த போது. தனக்கு அருகில் இருந்த சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது முகிலனுக்கு.

"அவங்க ரொம்ப அழகா இருக்காங்க இல்ல?" என்றான் இளங்கோ.

"காலை கட் பண்ணு" என்றான் முகிலன்.

"ஆமாம், அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே...! எப்படி இருந்தது என்னுடைய லைவ் டெலிகாஸ்ட்?"

"ஃபோனை வைடா" என்று அவனே அழைப்பை துண்டித்தான் முகிலன், இளங்கோ அதை செய்யட்டும் என்று காத்திராமல்.

சிரித்தபடி தன் கைபேசியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் இளங்கோ.

தன் இருக்கையை விட்டு எழுந்த தாரணி,

"இலக்கியா, நான் கொஞ்சம் உன்னோட வாஷ் ரூமை யூஸ் பண்ணலாமா?" என்றார்.

"ஓ தாராளமா... வாங்க ஆன்ட்டி" என்றாள் இலக்கியா.

ஆதிரை அவர்களுடன் செல்ல நினைத்தபோது,

"நீ இங்கேயே இரு கா. நான் இப்ப வரேன்" என்று அவரை தடுத்து நிறுத்திவிட்டு இலக்கியாவுடன் சென்றார் தாரணி.

மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்த ஆதிரை, தாரணியை பொருள் பொதிந்த பார்வை பார்த்தார். அதைப்பற்றி கவலைப்படாமல் இலக்கியாவுடன் சென்றார் தாரணி. தன்னறைக்கு அவரை அழைத்துச் சென்று குளியலறை நோக்கி கை நீட்டிய இலக்கியா, அவர் வெளியே வரும் வரை காத்திருந்தாள். அவர் வெளியே வந்தவுடன், அங்கிருந்து செல்லலாம் என்று எண்ணிய போது, அவளை அழைத்தார் தாரணி.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora