60 உண்மை நிறம்

1.1K 61 6
                                    

60 உண்மை நிறம்

"உன்னோட ஆட்டம் முடிஞ்சிடுச்சி, மிஸ் வெண்ணிலா" என்றான் இளங்கோ ஆபத்தான குரலில்?

"என்னை நெருங்க நினைச்சா, நடக்கிறதே வேற..." என்று பைத்தியக்காரிகை போல்  கத்தினாள் வெண்ணிலா.

"நாங்க தான் ஏற்கனவே நெருங்கிட்டோமே..." என்றான் இளங்கோ அலட்சியமாக.

"நீங்க எப்படி எங்களை அரெஸ்ட் பண்ண முடியும்? என்ன கேஸ்?' என்றாள் துணிச்சலுடன்.

"நீயும் தேனிசையும் பேசின ரெக்கார்டிங் எங்ககிட்ட இருக்கு" என்று அவன் கூற, முகம் வெறினாள் வெண்ணிலா.

"என்ன ஆச்சு மேடம்? இந்த ட்விஸ்டை நீங்க எதிர்பார்க்கலையா?" என்ற அவனது குரலில் எள்ளல் தெறித்தது.

"நாங்க சாதாரணமா தான் பேசினோம்" என்று தடுமாறினாள் அவள்.

"ஆமா ஆமா எவ்வளவு சாதாரணமா பேசினீங்க... முகிலனையும் இலக்கியாவையும் பிரிக்கிறது பத்தியும், பொய்யான கதையோட சீதாராமனை அவங்க வீட்டுக்கு அனுப்புனது பத்தியும் கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம பேசினீங்க தான்..."

வெண்ணிலாவுக்கு வியர்த்துக் கொட்டியது.

"செஞ்ச கேவலத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு மிஸ் வெண்ணிலா..."

"இன்ஸ்பெக்டர் சார், அந்த ரெக்கார்டிங் எல்லாம் நம்பாதீங்க. அதெல்லாம் எடிட் பண்ணதா தான் இருக்கும்" என்று படபடத்தாள்.

"எப்படி? நீ முகிலனோட குரலை வைச்சி செஞ்சியே, அந்த மாதிரியா?" என்றான் இளங்கோ விடாமல்.

"இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்ல. நீ என் மேல தேவையில்லாம பழி போடுற"

"எது சொல்றதா இருந்தாலும், நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க. நீங்க பேசுறதுக்கு நாங்க நிச்சயம் ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம். இப்போ எங்க கூட வாங்க" என்றார் ஆய்வாளர்.

இரண்டு பெண் காவலர்கள் வந்து அவள் கையில் விலங்கிட்டார்கள்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now