65 இறுதி பகுதி

1.5K 68 17
                                    

இறுதிப் பகுதி

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாள் தேனிசை, அவளை மருத்துவமனையில் வைத்திருப்பதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதால். அந்த விஷயத்தை திருக்குமரன் மூலமாக அறிந்து கொண்டான் முகிலன்.

இளஞ்செழியனை  பார்ப்பதற்காக தரைதளம் வந்தான் முகிலன். அவர் ஏற்கனவே உணவு மேசையில் அமர்ந்திருந்தார். தான் செய்ய நினைத்ததை செய்வதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைத்த முகிலன், அவருக்கு முன்னால் வந்து அமர்ந்தான்.

"அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

"சொல்லு சின்னு," என்றார் இளஞ்செழியன்.

ஆதிரையும் இலக்கியாவும் சமையலறையிலிருந்து வந்தார்கள். அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு அவர்களும் அமர்ந்து கொண்டார்கள்.

"அக்கா ஹாஸ்பிடல் இருந்து டிஸ்சார்ஜ் ஆயிட்டாங்க. மாமா அவங்கள வீட்டுக்கு கூட்டிகிட்டு போயிட்டாரு. அவங்களை பார்த்துக்க நம்ம ஒரு நர்சை  அப்பாயிண்ட் பண்ணிட்டு, பசங்களை பார்த்துக்கவும் ஆளை ஏற்பாடு பண்ணலாமுன்னு நினைக்கிறேன்" என்றான் முகிலன்.

இளஞ்செழியன் ஆதிரையை பார்க்க, அவரும் ஆம் என்று தலையசைத்தார்.

"அவங்களுக்கு நம்ம சொத்துல ஒரு பங்கை கொடுக்கிறது நல்லதுன்னு எனக்கு தோணுது. இல்லன்னா அவங்க மாமியார் வீட்ல அவங்களை நல்லபடியா நடத்த மாட்டாங்க. நம்ம இப்படி செஞ்சா, அதுக்காகவாவது அவங்களை நல்லா பாத்துக்குவாங்க இல்ல?" என்றான்.

அவன் கூறியதில் இருந்த உண்மையை உணர்ந்தார் இளஞ்செழியன். இப்பொழுதெல்லாம் மனிதர்களுக்கு ஏது மதிப்பு? அவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து தானே மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது...!

"இதை பத்தி நீ என்ன நினைக்கிற?" என்றார் இளஞ்செழியன்.

முகிலனும், இலக்கியாவும், அவர் ஆதிரையை கேட்பதாய் நினைத்தார்கள். ஆனால் இல்லை...

"அவரு உன்னை தான் கேக்குறார், இலக்கியா" என்றார் ஆதிரை.

அவரை திகைப்புடன் ஏறிட்ட இலக்கியா,

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now