5 நற்கிள்ளியின் கேள்வி
முகில் ட்ரேடர்ஸ்
முகிலனின் மனநிம்மதியை மொத்தமாய் சிதைத்து விட்டு சென்றாள் வெண்ணிலா. அவனால் அலுவலக வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. தனது அறையை விட்டு வெளியே வந்தான் முகிலன். ஒரு அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருந்த வரவேற்பாளர் பெண், முகிலனின் உயர்ந்த குரலை கேட்டு திடுக்கிட்டாள்.
"எதுக்காக அவளை என்னோட கேபின்குள்ள விட்ட? அப்பாயின்மென்ட் இல்லாம நான் யாரையும் பார்க்க மாட்டேன்னு நான் தான் உன்கிட்ட சொன்னேனே... என்னோட இன்ஸ்ட்ரக்ஷன்சை ஒழுங்கா ஃபாலோ பண்ணலேன்னா, உன்னை வேலையை விட்டு தூக்க நான் தயங்க மாட்டேன்" என்ற அவனது குரல் கேட்டு அந்த மொத்த அலுவலகமும் அதிர்ந்தது.
"அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரை மேனேஜர் கிட்ட கொடுக்க நான் உள்ள போயிருந்தேன், சார். அவங்க எப்படி உங்க கேபினுக்கு வந்தாங்கன்னு தெரியல" என்று நடுக்கத்துடன் கூறினாள் அந்த பெண்.
"இந்த மாதிரி நொண்டி சாக்கு சொல்றதை நிறுத்து" என்று அலுவலகத்தை விட்டு கிளம்பினான் முகிலன்.
இதற்கிடையில்,
வெண்ணிலா அலுவலகம் சென்று முகிலனை சந்தித்ததை பற்றி எண்ணியபடி கவலையுடன் அமர்ந்திருந்தார் ஆதிரை. அப்பொழுது, நற்கிள்ளியுடன் உள்ளே நுழைந்தார் இளஞ்செழியன். ஆதிரையிடம் ஒரு டப்பாவை கொடுத்தார் நற்கிள்ளி.
"நம்ம *கிள்ளி ஸ்வீட்ஸ்* ல அதிகமா சேல்ஸ் ஆகுற ஸ்வீட் இது" என்று கூறினார்.
வலிய புன்னகைத்தார் ஆதிரை.
"எதுவும் பிரச்சனை இல்லயே?" என்றார் அவர் முகத்தை பார்த்து, அவர் நிலையை புரிந்து கொண்டு விட்ட இளஞ்செழியன்.
"சின்னுவை பார்க்க வெண்ணிலா ஆஃபீசுக்கு போயிருக்கா" என்றார்
"அவ எதுக்கு அவனைப் பார்க்க ஆஃபீஸ்க்கு போனா?" என்ற அவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
"அவனை மீட் பண்ண அவ ஏன் இவ்வளவு அடம் பிடிக்கிறான்னு எனக்கும் தெரியல. இன்னைக்கு காலையில அவ இங்க வந்தப்போ, நான் சத்தம் போட்டு அனுப்பிட்டேன். ஆனா, அவ அதைப் பத்தி கொஞ்சமும் கவலைப்பட்டதா தெரியல" என்றார் கோபத்துடன்.
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...