22 மதிவாணனின் நடிப்பு
முகிலனின் கோபத்தை பார்த்து சிலையாய் நின்றான் இளங்கோ. அவன் எங்கு செல்கிறான் என்று அவன் யூகித்து விட்டான். அவன் மதிவாணனின் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். அவன் எவ்வளவு கோபக்காரன் என்று இளங்கோவுக்கு நன்றாகவே தெரியும். அவனது கோபத்தின் விளைவு யாரும் அளவிட முடியாதது. அவன் ஏதும் செய்து விடுவதற்கு முன், அவனை தடுக்க வேண்டும் என்று அவன் பின்னால் ஓடினான். ஆனால், அவன் சென்று சேர்வதற்கு முன், அங்கிருந்து புறப்பட்டு விட்டான் முகிலன். தனது இருசக்கர வாகனத்தின் சாவி தனது பாக்கெட்டில் இருக்கிறதா என்பதை தொட்டுப் பார்த்துக் கொண்டு, அது அங்கு இருக்கவும், தனது இருசக்கர வாகனத்தில் எகிறி அமர்ந்து, மதிவாணன் இல்லம் நோக்கி வண்டியை கிளப்பினான்.
இளங்கோவின் யூகம் சரி தான். இளங்கோ சென்றது மதிவாணனின் இல்லத்திற்கு தான்.
மதிவாணனின் இல்லம் அமைந்திருந்த இடத்தில், மெட்ரோ ரயிலுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்ததால், அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. தனது நேரத்தை காரில் அமர்ந்து வீணாக்க விரும்பாத முகிலன், சட்டென்று பக்கத்து தெருவில் புகுந்து, காரை நிறுத்திவிட்டு, அவர் இல்லம் நோக்கி நடந்தான்.
மதிவாணன் வீட்டு காவலாளர், சில வருடங்களுக்குப் பிறகு முகுந்தனை பார்த்தால் திகைத்து நின்றார். அந்த வீட்டின் பெரிய இரும்பு கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் முகிலன்.
முகிலனின் வருகையை சிறிதும் எதிர்பார்க்காத மதிவாணன், தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்று, ஆற அமர தேனீரை சுவைத்துக் கொண்டிருந்தார். நன்றாக இயங்கக்கூடிய கை, கால்களுடன் அவரைப் பார்த்த முகிலன் வியப்படைந்தான். அதிர்ச்சியுடன் அவரை உச்சி முதல் பாதம் வரை நோட்டமிட்டான். அவர் குணமடைந்து விட்டாரா? அல்லது, தனக்கு பக்கவாதம் ஏற்பட்டது போல் நடித்துக் கொண்டிருக்கிறாரா? சுவற்றிற்க்கு பின்னால் ஒளிந்து கொண்டான் முகிலன்.
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...