34 முகிலனின் கோபம்

1.6K 67 10
                                        

34 முகிலனின் கோபம்

இளங்கோவுக்கு ஃபோன் செய்தாள் இலக்கியா. அந்த அழைப்பை ஏற்றான் இளங்கோ.

"சொல்லுங்க, மிஸஸ் முகிலன்"

அதைக் கேட்டு புன்னகைத்தாள் இலக்கியா.

"ஹலோ மேடம், லைன்ல இருக்கீங்களா?" என்று சிரித்தான் இளங்கோ.

"ம்ம்ம்"

"சொல்லுங்க, இலக்கியா"

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் அண்ணா"

"இருங்க, இருங்க, இப்போ நீங்க என்ன என்ன சொல்லி கூப்பிட்டீங்க?" என்று சிரித்தான்

"உங்களுக்கு விஷயம் தெரியாது... இன்னைக்கு காலையில, நான் அவரை பேர் சொல்லி கூப்பிட்டேன்னு பெரிய கலவரமே நடந்துடுச்சு"

"அந்த கலவரத்துக்கு காரணம் தேள் கொடுக்கு தானே?"

"தேள் கொடுக்கா?" சிரித்தாள் இலக்கியா.

"ஆமாம், அதுக்கு தேனிசைன்னு பெயர் வச்சதுக்கு பதில், தேள் கொடுக்குன்னு வச்சிருந்தா, சரியா இருந்திருக்கும்.  அவங்க வீட்ல நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் அந்த தேள் கொடுக்கு தான் காரணம். எது நடந்தாலும் மூக்கை நுழைக்காம இருக்கவே மாட்டாங்க. சரி, அதனால இப்ப என்ன?"

"நீங்களும் சின்னையாவும் ஒரே வயசு. அதனால, அவரை மாதிரியே நான் உங்களுக்கு மரியாதை கொடுக்கணும்ல?"

"என்ன ஒரு லாஜிக்..." சிரித்தான் அவன்.

"நான் வெண்ணிலாவை பத்தி கேக்குறதுக்காக ஃபோன் பண்ணேன்"

"முகிலன் சொன்னானா?"

"இல்ல, அவர்  வெண்ணிலாவை பத்தி சொல்லல. விஷயத்தை மட்டும் தான் சொன்னாரு"

"உங்களை பயமுறுத்த வேண்டாம்னு நினச்சிருப்பான்"

"அப்படித்தான் இருக்கணும். சொல்லுங்க, அந்த ஆள் என்ன சொன்னான்?"

"அவன் ஃபோன்ல இருந்த நம்பரை வச்சி, அவ இருக்கிற இடத்தை நாங்க கண்டுபிடிச்சிட்டோம். ஆனா, நாங்க அங்க போன போது அவ அங்க இல்ல"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Место, где живут истории. Откройте их для себя