14 நம்ப முடியாத...
தனது அலுவலகத்தின் ஜன்னல் ஓரம் நின்று, சென்னை மாநகரத்தின் வாகன நெரிசலை பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன். அவன் சிறைச்சாலையில் இருந்த போது யாரிடமும் கலந்து பழகியதில்லை...! அவனை சுற்றி இருந்தவர்கள் அனைவரும், தான் செய்வது தவறு என்று தெரிந்தே குற்றம் செய்த குற்றவாளிகள். நல்லவர்களோடு மட்டுமே பழகும் பண்புடைய அவனால், அவர்களுடன் பேச கூட இயலவில்லை. சிறைச்சாலையில் அவனுக்கு இருந்த ஒரே தோழன் ஜமால்அக்தர். அவர் ஒரு காவல் ஆய்வாளர். முகிலனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்தவர். அவர் தான் முகிலன் மற்றவரிடமிருந்து விலகியிருக்க உதவியவர். அவரது உதவியால் தான் முகிலன் சிறைச்சாலையில் நிம்மதியாய் இருக்க முடிந்தது.
இப்பொழுதும் அவன் தனியாகத்தான் இருக்கிறான், அவனை சுற்றி அவனுக்கு வேண்டிய பலர் இருந்தும் கூட...! அவனது தலையெழுத்தில், நல்ல துணை என்பது எழுதி வைக்கவில்லை போலிருக்கிறது. அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நினைத்தான் தான். அதற்காக, அவனுக்கு இலக்கியாவை பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. அவளது புரிதல், அவளது குணம், அவள் அழகு அவனுக்கு பிடித்திருந்தது. திருமணத்தை பற்றி முடிவெடுக்க, அவனுக்கு வேண்டிய கால அவகாசம் இருக்கும் என்று அவன் எண்ணியிருந்தான். நற்கிள்ளியின் மகள் என்பதால், அவளும் அவனுக்காக காத்திருப்பாள் என்று நினைத்தான். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவளது அம்மாவும், அண்ணனும் வேறொருவரை மணந்து கொள்ள அவளை கட்டாயப்படுத்தி இருக்கலாம். அவர்கள் மீதும் தவறில்லை. அவனைப் போன்ற ஒருவனுக்காக அவள் காத்திருப்பதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் தான்.
தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு, அலுவலகம் விட்டு கிளம்பினான் முகிலன். வேலை செய்வதில் அவனுக்கு மனமே செல்லவில்லை என்பதால்.
முகிலன் இல்லம்
சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார் ஆதிரை. அப்பொழுது அவர்கள் வீட்டின் தொலைபேசி மணி அடித்தது. அதை எடுத்த ஆறுமுகம், அதன் ரிசீவரை ஆதிரையிடம் கொண்டு வந்து கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு பேசினார் ஆதிரை.
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...