40 புதிய அணுகுமுறை

1.3K 58 8
                                    

40 புதிய அணுகுமுறை

முகிலனை பார்க்கும் தைரியம் இல்லாததால், தன் போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருந்தாள் இலக்கியா. போர்வையால் தன்னை போர்த்திக் கொண்டிருந்த போதிலும், தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு இருந்தாள் அவள், முகிலன் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது போல. இவ்வளவு பதட்டத்துடன் அவள் இதற்கு முன் எப்பொழுதும் இருந்ததில்லை. என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்தபோது, அவளது உடல் நடுங்கியது, அவளது இதயம் தாறுமாறாய் துடித்தது.

முகிலனின் நிலமையும் அவளிடமிருந்து மாறுபடவில்லை. இருவரும் ஒரே நிலையில் தான் இருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு தான், அவன் கையில் அவள் நட்பின் அடையாளமாய் பிரண்ட்ஷிப் பேண்டை கட்டினாள். அவன், அவளை தனது தோழியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவள் அவனை அப்படித்தான் நினைத்திருப்பாள். முகிலனின் மனதில் இலக்கியாவை பற்றி ஏற்பட்டிருந்த எண்ணம், அவளை தன் தோழியாய் நினைக்க அவனை அனுமதிக்கவில்லை. அவர்களுக்கிடையில் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிகழ்வுகளும் அவனை அப்படி நினைக்கச் செய்யவில்லை. வாழ்க்கையில் முதன்முறையாக, தன் மனதிலும், உடலிலும் பல மாற்றங்களை உணர்ந்தான் முகிலன்.

மெல்ல முகத்தை திருப்பி இலக்கியவை பார்த்தான் முகிலன். அவள் தன்னை போர்வையால் ஒளித்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னிடமிருந்து தான் ஒளிந்து கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும். தனது முகத்தை சட்டென்று கணினியின் திரையின் பக்கம் திருப்பிக் கொண்டான், அவள் போர்வையின் ஓரத்தை சுருட்டி, ஒரு சிறிய வழியை ஏற்படுத்தி, அதன் வழியாக அவனைப் பார்த்ததை கவனித்த போது...! அதை பார்த்து சிரிக்காமல் இருக்க அவனுக்கு பெரும்பாடாய் போனது. அவளுக்கு எதிர்ப்புறம் முகத்தை திருப்பிக் கொண்டு, கண்களை மூடி சிரித்தான் அவன்.

அவன் சோபாவை விட்டு எழுந்ததை பார்த்து, மறுபடியும் தன்னை முழுமையாய் போர்த்திக் கொண்டாள் அவள். அவளுக்கு இடைவெளி கொடுத்து, அந்த அறையை விட்டு வெளியேறினான் முகிலன். அவள் உறங்கிய பின் திரும்பி வருவது என்று முடிவு செய்தான். ஆனால் இலக்கியாவோ, உறங்கும் நிலையில் இல்லை.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora